சமீபகாலமாக சன் டிவி சீரியல்களே டாப் 5 இடங்களை பிடித்து அசத்தி வருகிறது.
சீரியல்களுக்கு ஊர்களில் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். வயதானவர்கள் வீட்டில் இருப்பவர்களே சீரியல் பார்ப்பார்கள் என்று நம்மிடம் ஒரு பிம்பம் உள்ளது. ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள், ஆண்கள், கல்லூரி செல்லும் ஆண்கள், பெண்கள் என பல தரப்பட்ட மக்களும் சீரியல் பார்த்து வருகின்றனர். வாரம் வாரம் டிஆர்பி என்று எந்த சீரியல் அதிகம் பார்க்கப்பட்டுள்ளது என்ற லிஸ்ட் வெளியாகும். அப்படி எந்த சீரியல் முன்னணி வகிக்கின்றது என்று பார்க்கலாம்.
கடந்த முறையை போன்றே டாப் 5 இடங்களை விஜய் டிவிக்கு விட்டு தராமல் சன் டிவியே இடம்பிடித்துள்ளது. கடந்த வார இறுதியில் 11.8 புள்ளிகளுடன் TRP-யில் முதல் இடத்தை பிடித்த சிங்கப்பெண்ணே சீரியல் தான் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்துள்ளது. அடுத்தடுத்து முதலிடத்தை பிடித்து வருவது சாதாரண விஷயம் அல்ல.
தொடர்ந்து 2வது இடத்தில் கயல் சீரியலும், 3வது இடத்தில் வானத்தை போல சீரியலும் இடம்பெற்றுள்ளது. மேலும், எதிர்நீச்சல் சீரியல் 4வது இடத்தையும், சுந்தரி சீரியல் 5வது இடத்தையும், சிறகடிக்க ஆசை சீரியல் 6வது இடத்தையும் பிடித்துள்ளது.
அடுத்ததாக 7-வது இடத்தில் ஆலியா மானசா நடிக்கும் இனியா சீரியல் இடம்பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கடந்த வாரம் மகா சங்கமமாக ஒளிபரப்பான பாக்கியலட்சுமி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடர்கள் 7.19 புள்ளிகளுடன் 8-ம் இடத்தை பிடித்துள்ளன. மேலும், 9வது இடத்தில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஆனந்த ராகம் சீரியல் தான் 10வது இடத்திலும் உள்ளது. இதனால் ரசிகர்கள் விஜய் டிவிக்கு என்னாச்சு என்றும், சிலர் விஜய் டிவி சீரியல்கள் போர் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். விஜய் டிவியும் டிஆர்பிக்காக மெகா சங்கமம் எல்லாம் வைத்து வருகிறது. ஆனாலும் ரேட்டிங் வந்த பாட்டில்லை.