இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீசா? முழு லிஸ்ட் இதோ!

New Movies
New Movies

ஒவ்வொரு வார இறுதியிலும் ஓடிடி ரிலீசாக பல படங்கள் வெளியாகி ரசிகர்கள் இடையில் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

சமீபகாலமாகவே எந்த படங்களும் தியேட்டர்களில் ஹிட் கொடுக்காத நிலையில், அந்த பெயரை அரண்மனை 4-ம், ஸ்டார் படமும் உடைத்தெறிந்தது. இந்த 2 படங்களுமே ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. தொடர்ந்து இந்த வாரம் வெளியாகும் படங்கள் எது ஹிட்டடிக்கும் என்று பொறுத்திருந்தே பார்க்க முடியும். இந்த வாரம் ஓடிடி, தியேட்டர் என இரண்டிலும் வெளியாகும் படங்களை பார்க்கலாம்.

கருடன்

ரசிகர்கள் இந்த வாரம் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம் கருடன் என்றே சொல்லலாம். வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிகர் சூரி மிரட்டியிருக்கிறார் என ட்ரைலரிலேயே பெயர் எடுத்துவிட்டார். இப்படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் சூரி உடன் சசிகுமார், உன்னி முகுந்தன், ரோஷினி, பிரிகிடா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற மே 31-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

ஹிட்லிஸ்ட்

இயக்குனர் விக்ரமனின் மகன் கனிஷ்கா ஹீரோவாக அறிமுகமாகும் திரைப்படம் ஹிட்லிஸ்ட். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரித்து உள்ளார். இப்படத்தில் கவுதம் மேனன் வில்லனாக நடித்திருக்கிறார். இப்படத்தை சூர்யகதிர் காக்கள்ளர், கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். இப்படமும் வருகிற மே 31-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்:
வெளியானது இந்தியன் 2 காதல் பாடல்... டாப் ட்ரெண்டிங்கில் இடம் பெற்றது!
New Movies

அக்காலி

முகமது ஆசிஃப் ஹமீது இயக்கியுள்ள திரைப்படம் அக்காலி. இப்படத்தில் தலைவாசல் விஜய், நாசர், ஸ்வயம் சித்தா, வினோத் கிஷான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இது வருகிற மே 31-ந் தேதி திரைகாண உள்ளது.

மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி

ஷரன் ஷர்மா இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மாஹி. இப்படத்தில் ஜான்வி கபூர் கதையின் நாயகியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ராஜ்குமார் ராவ் நடித்துள்ள இப்படம் வருகிற மே 31-ந் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார் ஜான்வி கபூர்.

உப்பு புளி காரம்

ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகி இருக்கும் வெப் தொடர் தான் உப்பு புளி காரம். இதில் வனிதா, பொன்வண்ணன், ஆயிஷா, அஷ்வினி, நவீன், தீபிகா, ஃபரீனா, தீபக் ரமேஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இந்த வெப் தொடருக்கு ஷேக் இசையமைத்து உள்ளார். இந்த வெப் தொடர் நாளை (மே 30) டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸ் ஆக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com