துணிவு படத்துக்கு துபாயில் துணிச்சலாக பட பிரமோஷன்!

ஸ்கை டைவிங்
ஸ்கை டைவிங்

நடிகர் அஜீத் நடித்து விரைவில் வெளியாகவுள்ள துணிவு படத்துக்கான பிரமோஷன் துபாயில் ஸ்கை டைவிங் மூலம் சாகசமாக நடைபெற்றது.

நடிகர் அஜித் மற்றும் மஞ்சு வாரியர் நடித்துள்ள துணிவு படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி ரிலீசாகிறது.

இந்த படத்தின் 3 பாடல்கள் ஏற்கனவே இணையதளத்தில் வெளியாகிவிட்டது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில்,  துபாயில் விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் ஒரு குழுவினர், துணிவு படத்தின் பேனரை வானத்தில் பறந்தபடி வெளியிட்டனர்.

அஜித் போட்டோவுடன் கூடிய அந்த பேனரில், துணிவு படத்தின் டிரெய்லர் இம்மாதம் 31-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.  மேலும் இம்மாதம் 31-ம் தேதி துணிவு படத்தின் டிரெய்லரை உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலிபாவில் திரையிட படக்குழு திட்டமிட்டு வருவதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com