'துணிவு', 'வாரிசு' போஸ்டரால் நடந்த சம்பவம்! அதிரடி உத்தரவு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றம்!

'துணிவு', 'வாரிசு' போஸ்டரால் நடந்த சம்பவம்! அதிரடி உத்தரவு பிறப்பித்த கேரள உயர்நீதிமன்றம்!

'துணிவு' மற்றும் 'வாரிசு' போஸ்டருடன் ரசிகர்கள் சபரிமலையில் நின்றபடி போஸ் கொடுத்த புகைப்படம் வைரலாகியதைத் தொடர்ந்து, அதுகுறித்து கேரள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாளை உலகம் முழுவதும், அஜித், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'துணிவு', 'வாரிசு' திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இதையடுத்து இருதரப்பிலும் ரசிகர்கள் உற்சாகத்துடனும் ஆரவாரத்துடனும் முதல் ஷோவை எதிர்பார்த்து காத்திருப்பதோடு மட்டுமல்லாமல், தலைவனின் படம் ஹிட் ஆக வேண்டும் என்பதிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் படங்களின் கட்அவுட்கள், பேனர்கள் என ரசிகர்கள் பரபரப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

இயக்குனர் எச்.வினோத் ஒரு பேட்டி ஒன்றில் கூறும்போது, அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அவர்களது ரசிகர்கள் செய்யும் புரமோஷன் என்பது, ரூ.100 கோடி செலவு செய்தாலும் கிடைக்காது என்று கூறி இருந்தார்.

அந்தவகையில் சமீபத்தில் அஜித் விஜய் ரசிகர்கள் சிலர் சபரிமலையில் 'துணிவு', 'வாரிசு' படத்தின் போஸ்டர்களுடன் சென்று, படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்ததோடு, சபரிமலையில், போஸ்டர்ளைக் கையில் பிடித்து நின்றபடி போஸ் கொடுத்திருந்தனர். அது சம்பந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியது.

இந்நிலையில் கேரள உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. சபரிமலை கோவிலுக்குள் சினிமா போஸ்டர்கள் எடுத்துவருவதற்கும், இசைக்கருவிகள் இசைப்பதற்கும் தடை விதிக்குமாறு சபரிமலை தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததற்கு ரசிகர்கள் இவ்வாறு செய்த செயல்தான் காரணமாகவும் பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com