டைகர் 3 படத்தில் பாலிவுட்டின் மூன்று மாஸ் ஹீரோக்கள்...யார் யார் தெரியுமா?

Tiger movie
Tiger movie

ணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான் நடித்த டைகர் 3ல் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ரித்திக் ரோஷன் கேமியோ ரோல் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டைகர் 3 படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 12ம் தேதி தீபாவளி சிறப்புப் படமாகத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாகம் ஒன்று மற்றும் இரண்டு ஹிந்தியில் ஒரு பெரிய ஹிட் கொடுத்தது. இப்படத்தில் ஹீரோயினாக கத்ரீனா கைஃப் மற்றும் வில்லனாக இம்ரான் ஹாஷ்மி நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளர் YRF Spy universe என்று, தமிழில் LCU போன்ற ஒரு universe ஐ உருவாக்கினார். அதாவது LCU போதைப் பொருட்கள் பற்றிய படம் என்றால், YRF இந்திய நாட்டை ஒற்றுப்பார்த்து எப்படி ஒவ்வொரு முறையும் காப்பாற்றுகிறார்கள் என்பதே. 2004ம் ஆண்டு வெளியான Dhoom படமே இந்த universe ன் முதல் படம். பிறகு சல்மான் கான் நடிப்பில் வெளியான எக் தி டைகர் ( டைகர் பாகம் 1) டைகர் ஜிந்தா ஹாய் ( டைகர் பாகம் 2) படங்கள் YRF Spy universe ன் அடுத்து வெளியான படங்கள்.

2019ம் ஆண்டு ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான வார் படம் யாஷ் தயாரித்ததால் இதுவும் YRF Spy universe ன் கீழ் வந்தது. சமீபத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தின் இறுதியில் ஷாருக்கானுக்கு உதவி செய்ய சல்மான் கான் கேமியோ ரோல் செய்தார்.

இந்நிலையில் சல்மான் கான் நடித்த டைகர் மூன்றாவது பாகம் நவம்பர் 12ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ஒரு மாதத்திற்கு முன்னதாகவே வெளியானது. இதனையடுத்து இன்று வெளியான தகவலில் டைகர் படத்தின் மூன்றாவது பாகத்தில் வார் படத்தின் கதாபாத்திரம் ரித்திக் ரோஷனும் பதான் படத்தின் கதாபாத்திரம் ஷாருக்கானும் இப்படத்தில் கேமியோ ரோல் நடித்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும் ஷாருக்கான் மற்றும் ரித்திக் ரோஷன் இந்த படத்தில் நடித்ததைப் பற்றி அந்த படத்தில் வேலை செய்தவர்கள் கூறியுள்ளனர். அதாவது இந்த படத்தில் இருவரின் ரோல் குறைந்த நிமிடங்களே என்றாலும் மாஸாக இருக்கும் எனப் படத்தைப் பற்றி சொன்னதை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

Pathan Movie
Pathan Movie

இதையடுத்து பாலிவுட்டின் மூன்று மாஸ் ஹீரோக்கள் ஒரே திரையில் வருகிறார்கள் என்ற இந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த செய்தி X தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com