அந்த காலத்திலேயே பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பிய எம்ஜிஆர் படங்கள் இதுதான்..!

எம்ஜிஆர்
எம்ஜிஆர்

சினிமாவிலும், அரசியலிலும் இவர் போல் யாரும் இல்லை என்று சொல்லும் அளவுக்கு பெயரை எடுத்தவர் தான் எம்ஜிஆர். துள்ளிக்குதித்து ஆடும் நடனம் , வாள் சண்டை , கைகளை உயர்த்தி பாடுவது , உதட்டை கடித்து வசனம் உச்சரிப்பது என தமிழ் சினிமாவில் மாறுபட்ட ஐகானாக திகழ்கிறார் எம். ஜி.ஆர். இன்று விருதுகளை வாங்கி குவிக்கும் பல நடிகர்களுக்கும் எம்.ஜி.ஆர்தான் எங்களின் முன்னோடி என சொல்லக்கேட்டிருக்கிறோம்.

இன்றைய சினிமாவில் 10 நாட்கள் ஓடினாலே அது சிறந்த படமாக கருதப்படுகிறது. ஆனால் அன்றைய காலத்தில், 100 நாட்களை கடந்து எத்தனையோ படங்கள் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்துள்ளது.

1936ல் சதிலீலாவதி திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான எம்ஜிஆர் 1978ல் வெளியான மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை 136 திரைப்படங்களில் நடித்தார். 136 திரைப்படங்களில் சுமாராக 114 திரைப்படங்களில் எம்ஜிஆர் நாயகனாக நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு 1958ல் வெளியான நாடோடி மன்னனுக்குப் பிறகு அவரது படங்கள் தனிக்கவனம் பெற ஆரம்பித்துள்ளது.

சென்னையில் மட்டும் குறிப்பாக எம்ஜிஆரின் அதிக வசூல் செய்து சாதனை படைத்த படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

  • எங்க வீட்டுப் பிள்ளை (1965)

  • அடிமைப் பெண் (1969)

  • மாட்டுக்கார வேலன் (1970)

  • ரிஷாக்காரன் (1971)

  • உலகம் சுற்றும் வாலிபன் (1973)

  • இதயக்கனி (1975)

  • மீனவ நண்பன் (1977)

  • இன்று போல் என்றும் வாழ்க (1977)

ஆகிய படங்கள் அந்த காலத்தில் 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனைப்படைத்துள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com