2023ல் உலகளவில் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூல் செய்த டாப் 10 இந்திய படங்கள்!

உலகளவில் சமீபகாலமாக சர்வதேச விருதுகளுக்காக கவனம் பெறும் இந்திய திரைப்படங்கள், ரசிகர்களிடம் பேசுப்பொருளாக மாறுவது அதனுடைய வசூல் ரீதியான வெற்றியை பொருத்துதான். அந்தவகையில் 2023ம் ஆண்டில் வசூலில் சாதனைப்படைத்த டாப் 10 இந்திய படங்களை இந்த தொகுப்பில் காணலாம்..!
2023 Top 10 box office collection
2023 Top 10 box office collection
2023 Highlights
2023 Highlights

1. ஜவான்:

Jawan
Jawan

மிழ் திரையுலகில் வசூல் மன்னனாக வலம் வரும் இயக்குநர் அட்லி, 2023ம் ஆண்டில் பாலிவுட்டில் கால்தடம் பதித்தார். அட்லின் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாரூக்கான், நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய காதபாத்திரத்தில் நடித்த ஜவான் இந்த ஆண்டு வெளியானது. செப்டம்பர் 7ம் தேதி வெளியான ஜவான் உலக அளவில் 1,150 கோடிகளை வசூல் செய்து மாபெரும் சாதனைப்படைத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2. பதான்:

Pathaan
Pathaan

ந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பதும் ஷாரூகானின் பதான் திரைப்படம்தான். இத்திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம், டிம்பிள் கபாடியா போன்ற முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர். பதான் திரைப்படம் உலக அளவில் 1,050 கோடி வசூலை எட்டியுள்ளது.

3. அனிமல்:

Animal
Animal

ந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் வெளியான ANIMAL திரைப்படம் டிசம்பர் 1ம் தேதி வெளியானது. ரன்பீர் கபூர், அனில் கபூர், பாபி தியோல், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். 140 பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ANIMAL திரைப்படம் இதுவரை உலக அளவில் 880 கோடி வசூலை பெற்றுள்ளது.

4. கதர் 2:

Gadar 2
Gadar 2

ந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடிப்பது, பாலிவுட்டை சேர்ந்த கதர் 2 திரைப்படம். இப்படத்தை அனில் ஷர்மா இயக்க்கியுள்ளார். இத்திரைப்படத்தில் சன்னி தியோல், அமீஷா படேல், உத்கர்ஷ் சர்மா, சிம்ரத் கவுர் ரந்தாவா ஆகியோர் நடித்துள்ளனர். கதர் 2 திரைப்படம் உலக அளவில் 690 கோடி வசூலை எட்டியுள்ளது. இப்படத்தின் மொத்த பஜ்ஜட் 80 கோடி.

5. லியோ:

Leo
Leo

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இந்திய அளவில் வசூல் ரீதியாக ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அக்டோபர் 19ம் தேதி வெளியான லியோ உலக அளவில் 620 கோடி வசூல் செய்தது.

6. ஜெயிலர்:

Jailer
Jailer

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இப்படம் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரஜினிகாந்திக்கு மாபெரும் வசூல் ரீதியான வெற்றியைப்பெற்றது. ஜெயிலர் திரைப்படம் உலக அளவில் 607 கோடி வசூலை எட்டியது.

7. சாலார்:

Salaar
Salaar

சாலார் திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். இப்படத்தில் பிரபாஸ், பிருத்விராஜ் சுகுமார், ஸ்ருதி ஹாசன், ஜெகபதி பாபு மேலும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சாலார் திரைப்படம் திரையரங்குகளில் டிசம்பர் 22, 2023 அன்று வெளியிடப்பட்டது. சாலார் திரைப்படம் உலக அளவில் 500 கோடி வசூலை தாண்டி வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது.

8. டைகர் 3

Tiger 3
Tiger 3

ந்த பட்டியலில் எட்டாவது இடத்தை பிடிப்பது, பாலிவுட்டை சேர்ந்த டைகர் 3 திரைப்படம். டைகர் 3 னின் இயக்குனர் மனீஷ் சர்மா. இப்படத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஷ்மி, சிம்ரன் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்துள்ளனர். டைகர் 3 திரைப்படம் உலக அளவில் 466 கோடி வசூலை எட்டியுள்ளது.

9. ஆதிபுருஷ்:

Adipurush
Adipurush

ராமயனத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆதிபுருஷ். ஓம் ரூட் இயக்கிய இத்திரைப்படத்தில் பிரபாஸ், கிருத்தி ஷானன், சைஃப் அலிகான், தேவதத்தா நாகே, சன்னி சிங் ஆகியோர் நடித்துள்ளனர். ஆதிபுருஷ் திரைப்படம் திரையரங்குகளில் ஜூன் 16, 2023 அன்று வெளியிடப்பட்டது. ஆதிபுருஷ் திரைப்படம் உலக அளவில் 410 கோடி வசூல் செய்தது.

10. ராக்கி அவர் ராணி கி பிரேம் கஹானி:

Rocky Aur Rani Kii Prem Kahani
Rocky Aur Rani Kii Prem Kahani

பாலிவுட் பிரபல இயக்குநர் கரண் ஜோஹர் இயக்கத்தில் ராக்கி அவர் ராணி கி பிரேம் கஹானி திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் ரன்வீர் சிங், ஆலியா பட், தர்மேந்திரா, ஷபானா ஆஸ்மி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் உலக அளவில் 355 கோடி வசூலை எட்டியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com