2024 ஆம் ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள்!

Top 10 movies in 2024
Top 10 movies in 2024

2024 ஆண்டின் தேசிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படத்த முதல் 10 இடங்களில் உள்ள படங்களை காண்போம்.

10. மஞ்சும்மல் பாய்ஸ்:

manjummel boys
Manjummel BoysImg Credit: Radio city

முழுக்கவும் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து, ₹20 கோடி பட்ஜெட்டில் யூட்யூப் வீடியோ போல எடுக்கப்பட்ட சுவராசியம் மிகுந்த இந்த திரைப்படம், தமிழ் நாட்டு பாக்ஸ் ஆபிஸில் நுழைந்து அதகளம் செய்தது. இதுவரை மலையாள சூப்பர் ஸ்டார்கள் செய்த சாதனைகளை எல்லாம் தகர்த்து ₹242 கோடி வசூலை வாரிக் குவித்தது.

9. அமரன்:

AMARAN
AMARAN

பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் ₹70 கோடி பட்ஜெட்டில் வெளியாகி, போட்டிக்கு கங்குவா வந்தும் தன் வசூல் குறைவில்லாமல் கொடுத்த தேசப்பற்று மிகுந்த திரைப்படம். இந்த வருடம் தமிழ் சினிமாவில் அதிக நாட்கள் ஓடி வசூலை குவித்த ஒரே படம். இத்திரைப்படம் ₹330 கோடி வசூலை குவித்ததன் மூலம்,சிவகார்த்திகேயன் ₹300 கோடி பாக்ஸ் ஆபிஸை தொட்ட 4 வது தமிழ் நடிகர் ஆனார்.

8. ஹனுமேன்:

Hanuman Movie
Hanuman

ஹனுமான் கடவுளை மையப்படுத்தி ₹40 கோடி பட்ஜெட்டில் புதுமுக நாயகன் தேஜா சஜ்ஜா நடித்த இத்திரைப்படம் தெலுங்கு மாநிலங்களில் பெரிய வெற்றியை பெற்றது. இதே திரைப்படத்தில் பெரிய நடிகர்கள் நடித்திருந்தால் ₹1000 கோடி வசூலை தொட்டிருக்கும். இத்திரைப்படம் ₹350 கோடி வசூலை குவித்து இந்தியாவையே அதிர வைத்தது.

7. சிங்கம் அகைன்:

Singham Again
Singham Again

அஜய் தேவ்கன் போலீஸாக நடித்த சிங்கம் படத்தின் 3வது பாகம் இது. படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பினாலும் படத்தின் பட்ஜெட் ₹350 கோடி தாண்டியுள்ளது. படத்தின் வசூல் ₹389 கோடியாக இருந்தது.

6. புல் புலையா 3:

Bhool Bhulaiyaa 3
Bhool Bhulaiyaa 3

தமிழ் சந்திரமுகி படத்தின் ஹிந்தி பதிப்பின் மூன்றாவது பாகம் இது. பாலிவுட்டில் படங்கள் வெற்றி பெறுவதே பெரிய விஷயம் ஆவதால் ₹150 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் ₹417 கோடி வசூலை தாண்டி திரையில் ஓடுகிறது.

5. தி கோட் - The GOAT:

The Goat
The Goat

விஜய், பிரபுதேவா, பிரசாந்த் நடித்து ₹400 கோடி பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் முதல் வாரத்திலேயே நல்ல வசூலை குவித்து விட்டது. படத்தின் மொத்த வசூல் ₹456 கோடி.

4. தேவரா:

Devara Review
Devara

ஜூனியர் NTR நடிப்பில் ₹250 கோடி செலவில் உருவான இத்திரைப்படம் சில சர்ச்சைகளுக்கு உள்ளானாலும் ₹525 கோடி வசூலை குவித்தது. 

3. ஸ்திரி 2:

Stree 2
Stree 2

ஷ்ரத்தா கபூர் நடிப்பில் ₹80 கோடி செலவில் உருவாகிய இந்த திகில் நகைச்சுவைத் திரைப்படம் பாலிவுட்டின் மானத்தை காப்பாற்றியுள்ளது. இத்திரைப்படம் இல்லாவிட்டால் இந்த வருடம் பாலிவுட் முதல் 5 இடங்களுக்குள் வந்திருக்காது.₹875 கோடி வசூலை குவித்து மானம் காத்த மங்கையர்கரசி ஆகியுள்ளார் ஷ்ரத்தா கபூர்.

2. கல்கி 2898 AD:

Kalki 2898 AD
Kalki 2898 AD

பிரபாஸ் நடிப்பில் 600 கோடி செலவில் பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகி, இந்த வருடம் ₹1000 கோடி வசூலை தொட்ட முதல் திரைப்படமானது. இதுவரை  ₹1200 கோடி வசூல் செய்துள்ளது.

1. புஷ்பா 2 - தி ரூல்:

Pushpa 2: The Rule
Pushpa 2: The Rule

அல்லு அர்ஜூன் நடிப்பில், ₹400 கோடி பட்ஜெட்டில் உருவாகி பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய படம். வெளியான போது ஒட்டு மொத்த இந்தியாவின் பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளையும் நொறுக்கியுள்ளது. இதுவரை ₹1500 கோடி வசூல் செய்தும், வேகம் அடங்காமல் உள்ளது. இந்த ஆண்டு முடிவிற்குள் ₹2000 கோடியை தாண்டினால் கூட ஆச்சர்யம் இல்லை. புஷ்பா பூ இல்ல புயலு.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com