
உலகம் முழுவதும் பெரிய பெரிய படங்களை தான் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்ற காலம் சென்று, படம் நன்றாக இருந்தாலே தற்போது எல்லாம் வரவேற்கப்படுகிறது. அந்த வகையில் நடுத்தர மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. படம் ரிலீஸ் ஆகும் போது, பெரிதளவு தியேட்டர் வழங்கப்படவில்லை. தற்போது நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரிப்பதால், படத்திற்கு மவுசு அதிகரித்துள்ளது.
ஏற்கனவே சசிக்குமாருக்கு, அயோத்தி ஒரு நல்ல படமாக அமைந்தது. தொடர்ந்து இந்த படமும் அவர் ஹிட் கொடுத்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் பேமிலி. குட் நைட், லவ்வர் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய யுவராஜ் கணேசனின் மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தான் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தையும் தயாரித்துள்ளது. இப்படத்தில் இலங்கைத் தமிழராக நடித்துள்ளார் சசிகுமார். இப்படம் மே 1ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆன 5 நாட்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளது.
டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, ரமேஷ் திலக், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இப்படம் ரிலீசுக்கு முன்னரே திரையுலகினர் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், ரிலீஸ் ஆன பின்னரும் இப்படத்திற்கு ஆடியன்ஸிடமும் செம ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.
இந்நிலையில், இதில் சசிகுமாருக்கு மகனாக நடித்த நடிகர் மிதுன் ஜெய் சங்கரை பார்த்த ரசிகர்கள் இவரை ஏற்கனவே பார்த்திருக்கிறோம் என யோசித்தார்கள். இந்த நிலையில், இவர் ஏற்கனவே நடித்த ஒரு ஹிட் படத்தின் மூலம் பிரபலமான புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆம்... பகத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் மிதுன் ஜெய் சங்கர் நடித்துள்ளார். அதில், பகத் பாசிலுக்கு செல்ல தம்பியாக நடித்திருப்பார். இவருக்காக பல பேரிடம் பகத் பாசில் சண்டையிட்டிருப்பார். இன்றளவும் இந்த படத்தின் இல்லுமினாட்டி பாடல் பேமஸாகவுள்ளது. இந்த புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ஹிட் அடித்திருப்பதாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.