தூத்துக்குடியில் திடீரென மயங்கி விழுந்த டி.ராஜேந்தர்.. ஏன் தெரியுமா?

டி.ராஜேந்தர்
டி.ராஜேந்தர்

தூத்துக்குடியில் டி.ராஜேந்தர் மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து அவரே விளக்கமளித்துள்ளார்.

கடந்த மாதம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத மழையால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. தொடர்ந்து வெள்ளத்தால் பாதித்த தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்களை பல அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என ஏராளமானோர் நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

நேற்று விஜய் மக்கள் இயக்கம் சார்பில், நடிகர் விஜய்யும் பல மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான டி.ராஜேந்தர் தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு சென்ற அவர், அரசியலை மறந்து வேறொரு வாழ்க்கை வாழ்கிறேன். எனது மகன் சிலம்பரசன் ரசிகர் மன்றம் மற்றும் டி.ஆர்.மன்றம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளோம்.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டிருந்த போது திடீரென மயங்கி விழுந்ததால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்ட மக்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்த நிலையில், இன்று அவர் ஏன் மயங்கி விழுந்தார் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், அந்த மக்கள் பாதிக்கப்பட்ட கஷ்டத்தை தாங்க முடியாமல் பதட்டத்தில் மயங்கியதாக தெரிவித்தார். இதனை கேட்ட ரசிகர்கள் தங்களது வேதனைகளை பகிர்ந்து கொண்டனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com