நடிகர் விஷால் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் லத்தி சார்ஜ் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், விஷால் வித்தியாசமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதாவது கணிசமான ஒரு தொகையை 5 பெண் குழந்தைகளின் கல்விக்காக தருவதாக அறிவித்தார்.அதையடுத்து தங்களின் பள்ளிச் சீருடையுடன் மேடைக்கு வந்த அந்த 5 குழந்தைகளும் விஷாலிடமிருந்து காசோலையை பெற்று சென்றனர்.
"நீங்கள் தரும் பொக்கே, மாலை பொன்னாடை போன்றவை சற்று நேரத்தில் எங்கோ குப்பைக்கு சென்று விடும். ஆனால் இந்த கல்விக்கு செய்யும் உதவி, காலம் முழுவதும் அந்த குழந்தைகளுக்கு மாற்றம் ஏற்படுத்தும், நான் இதை மேடையில் தருவதற்கு காரணம், இதனால் உந்தப்பட்டு இது போன்ற உதவிகளை பிறரும் செய்ய வேண்டும் என்பதால்தான். "என்றார் விஷால். தனது அம்மாவின் பெயரில் அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் இந்த உதவிகளை செய்து வருகிறார் விஷால்.
சரி.. லத்தி சார்ஜ் படம் எப்படி? இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிளாக நடிக்கிறார் விஷால். மேலும் வினோத் குமார் இயக்கியுள்ள இந்த லத்தி சார்ஜ் படத்தில் ஆக்ஷனுடன் சேர்த்து சினிமாவில் அதிகம் சொல்லாத போலீஸ் கான்ஸ்டபிள்களின் வாழ்க்கையும் சொல்ல பட்டுள்ளது.
படத்தின் இசை வெளியிட்டு விழாவில் போலீஸ் சீருடையுடன் விஷால் கலந்து கொண்டார். சில ஆண்டு இடைவெளிக்கு பின் சுனைனா லத்தி சார்ஜில் நடிக்க வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.