நமது நாட்டின் இளைய தலைமுறையினர் அவர்களது திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை நெற்றி பொட்டில் அடித்தது போல சொல்கிற்து 'ஐங்கரன்' படம்! டைரக்டர் ரவி அரசுவின் இயக்கம் அசத்தல்.
தனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அரசால் அங்கீகாரம் எதிர்பார்த்து கிடைக்காமல் போராடிகொண்டிருக்கிறார் ஜி. வி. பிரகாஷ் . நாமக்கல் பகுதியில் கோழிபண்ணை வைத்து நடத்தி கொண்டிருக்கும் முதலாளி ஒருவர், லாபம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு தனது பண்ணை கோழிகளின் வளர்ச்சிக்காக அளவுக்கு அதிகமான மருந்துகளை செலுத்துவதைக் கன்டுபிடிக்கிறார் ஜி. வி. பிரகாஷ். அதை சமூக வலைத்தளங்களில் ஜி.வி வெளியிட, அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார் முதலாளி. இதன் நகைகடைகளில் கொள்ளை அடிக்கும் வடநாட்டு கொள்ளை கும்பல் ஒன்று ஒரு சில காரணங்களுக்காக இரு நூறு அடி பள்ளத்தில் ஒரு குழந்தையை தள்ளி விடுகிறது.இந்த குழந்தையை மீட்க – தான் கண்டு பிடித்த அறிவியல் கண்டுபிடிப்புகள் மூலமாக முயற்சிக் கிறார், ஜி.வி.
ஜி.வி பிரகாஷ் அந்த குழந்தையை மீட்டாரா? கொள்ளை கும்பல் என்ன ஆனது? கோழிபண்னை முதலாளி என்ன செய்தார்? என்ற இந்த இருவெவ்வேறு கதைகளங்களை ஒரு புள்ளியில் சேர்த்து சுவாரசியமாகவும், நேர்த்தியாகவும், சமூக அக்கறையுடனும் சொல்லிஇருக்கிறார் டைரக்டர் ரவி அரசு.
குழந்தையை மீட்க மக்களும் ஜி. வி யும் காட்டும் அக்கறை, அதிகாரிகளுக்கு இல்லாமல் இருப்பது, அறிவுசார் காப்புரிமை மையத்தில் அதிகாரிகள் எந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கும் ஆதரவு அளிக்காமல் இருப்பது என பல கா ட்சிகளில் டைரக்டர் நம்மை ஈர்க்கிறார்.
ஜி. வி. பிரகாஷ் சமூக அக்கறை கொண்ட படத்தில் நடித்திருக்கிறார். சபாஷ் வாய்ப்புக்கும், அங்கீகாரதிற்கும் ஏங்கும் இளைஞனாக கட்சிதமாக பொருந்தி போகிறார். அதேபோல் நேர்மைக்கும், திறமைக்கும் மதிப்பில்லாத காவல் துறை பணியில் பொங்குகிறார் நரேன்..மற்றபடி மஹிமா நம்பியார் வந்து போகிறார். சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் நாமே குழிக்குள் விழுந்தது போல உணர்வு வருகிறது. நேர்மையாக இருப்பதே ஒரு சாதனைதான் என்பது போன்ற ஆனந்த் குமரேஷ் வசனங்கள் கூடுதல் பலம்.
நமது நாட்டில் பல திறமையாளர்கள் இருக்கிறார்கள். நமது சிஸ்டத்தால் இவர்களது திறமை வெளிப்படுவது இல்லை என கொஞ்சம் அழுத்தமாகவேசொல்லிருக்கிறது ஐங்கரன்.
ஐங்கரன் -தேவை அங்கீகாரம்!