சோனி லைவ் தளத்தில் வெளியான 'விக்டிம்' திரைப்படம் ரொம்பவே வித்தியாசமானது. இந்த ஒரே திரைப்படத்தில் 4 வெவ்வேறு கதைகளை 4 பெரிய இயக்குனர்களான பா. ரஞ்சித், எம் . ராஜேஷ், சிம்பு தேவன், வெங்கட் பிரபு ஆகியோர் இயக்கி உள்ளனர்.
புத்தரின் கொள்கையான 'தம்மம்' என்பதை தன் தொடருக்கு பா. ரஞ்சித் தலைப்பாக வைத்துள்ளார்.வயல் வெளிதான் களம். உயிருக்கு போராடும் நிலையிலும் ஜாதிக்காக சண்டை போடும் மூர்க்கம் என பல்வேறு விஷங்களை முப்பது நிமிடத்தில் சொல்லிருக்கிறார்.இந்த விஷயங்களை புத்தரின் சிலை மௌன சாட்சியாக பார்த்து கொண்டிருக்கிறது.
சிம்பு தேவன் இயக்கி நாசர், தம்பி ராமையா நடித்துள்ள "கொட்டை பாக்கு வெத்தலையும், மொட்டைமாடி சித்தரும்" என்ற படம் டைட்டிலை போன்றே பேண்டசி திரில்லராக இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் எப்படி நடுத்தர குடும்பத்தின் பொருளாதாரத்தை பாதித்தது என்பதை அழகிய ட்ராமாவாக சொல்லியிருக்கிறார் சிம்பு. இதுவரை நாம் பார்த்திராத தம்பி ராமையாவையும், நாசரும் இந்த சிறு படத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள்.
வெங்கட் பிரபு இயக்கி உள்ள 'confesson' படம் ஒரு பெண்ணின் வாக்கு மூலமாக அமைந்துள்ளது.அமலா பால் நீண்ட இடை வெளிக்குப்பின் – தான் ஒரு தேர்ந்த நடிகை என்பதை இந்த படத்தில் நிரூபித்துள்ளார். அவர் தன் எமோஷனல், கிளாமர், செண்டிமெண்ட் என மூன்றையும் கண்ணிலேயே காட்டுகிறார்.
எம்.ராஜேஷ் இயக்கி உள்ள படம் சைக்கோ திரில்லர் உணர்வை தருகிறது. மாற்று சினிமாவை விரும்புபவர்களுக்கு 'விக்டிம்' ஓடிடி திரைப்படம் வித்தியாசமான விஷ்வல் ட்ரீட்மென்டை தருகிறது.