வதந்திகளை வரவேற்கிறேன்: நடிகர் விக்ரம்.

வதந்திகளை வரவேற்கிறேன்: நடிகர் விக்ரம்.

-ராகவ் குமார்.         

டிகர் விக்ரம் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆனதாக செய்தி வந்ததும் அவரது ரசிகர்கள் பதறினர். அடுத்த நாளே மருத்துமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் ஆன தகவல் வந்ததும்தான் நிம்மதி அடைந்தனர்.  

இந்த சூழலில் விக்ரம் நடித்த 'கோப்ரா' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் அதற்கான ட்ரைலர் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள ஒரு மாலில் நடைபெற்றது. திறந்த வெளி அரங்கில் நடந்த இந்த நிகழ்வில் ஆயிரகணக்கான ரசிகர்கள் விக்ரமை காண காத்திருந்தார்கள்.

விக்ரமையும், ஆர் ரகுமானையும் வரவேற்பதை போல மழை அவ்வப்போது தூறி  கொண்டிருந்தது. இந்த தூறலை பொறுப்படுத்தாமல் தங்கள் ஹீரோ எப்படி இருக்கிறார் என்று காணும் ஆர்வத்தில் ரசிகர்கள் நனைந்தபடி காத்து கொண்டிருந்தனர். சிறிது காலதாமதத்துடன் வந்த விக்ரம் அதே ஹேண்ட்ஸம் தோற்றத்தில் தன் உடல் நிலை பற்றிய  வதந்திகளுக்கு முற்று புள்ளி வைப்பது போல கம்பீரமாக வந்திறங்கினார். 

"என் உடல்நிலை பற்றி பல்வேறு செய்திகளை பலர் பரப்புகின்றனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கின்றேன்.20 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு விபத்து நடந்தது. என் காலை அகற்ற வேண்டும் என்று சொன்னார்கள். நம்பிக்கையுடன் அதிலிருந்து மீண்டு விட்டேன்.இப்போது வரும் வதந்திகள் எனக்கு பெரிய விஷயமே இல்லை. வதந்திகளை வரவேற்கிறேன். அவை எனக்கு கூடுதல் உத்வேகம் தருகிறது'' என்ற விகரம், ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.

''பல ஆண்டுகளுக்கு முன்பு சோழா  டீ என்ற விளம்பரத்தில் சோழ மன்னனாக நடித்தேன். அந்த விளம்பரத்திற்கு இசை அமைத்தவர் திலீப். இப்போது ஆதித்த கரிகாலனாக நடிக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்திற்கு இசை அமைப்பவர் அதே திலீப்தான். ஆனால் இப்போது தன் பெயரை ஏ.ஆர். ரஹ்மான் என்று மாற்றிகொண்டு விட்டார்'' என்று கலகலப்பாக பழைய ஞாபகங்களை நினைவு கூறினார்

மேலும் ''இப்படத்தின் டைரக்டர் அஜய் ஞானமுத்து கடினமான உழைப்பாளி. இந்த அளவுக்கு நான் வளர்ந்ததும், இங்கே நிற்பதற்கும் ரசிகர்களான நீங்கள்தான் காரணம்'' என்று நெகிழ்ச்சியுடன் பேசி முடித்தார் விக்ரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com