நடிகை ரோஜாவின் மகளுக்கு விருது!

நடிகை ரோஜாவின் மகளுக்கு விருது!
Updated on

டிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகாவுக்கு தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளர் என்ற விருது கிடைத்துள்ளது. 

 -இதுகுறித்து  நடிகை ரோஜா தரப்பில் தெரிவித்ததாவது;

நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜாவின் மகள் அன்ஷு மாலிகா தற்போது வெப் டெவலப்பர் மற்றும் கண்டெண்ட் ரைட்டராக இருப்பதோடு, சிறந்த எழுத்தாளரும்கூட!  அன்ஷூ மாலிகா எழுதிய "தி ஃப்ளேம் இன் மை ஹார்ட்" என்ற புத்தகம் ஜி டவுன் என்ற இதழில் வெளியானது. இந்த புத்தகத்துக்காக தென்னிந்தியாவின் சிறந்த எழுத்தாளருக்கான விருது அன்ஷூ மாலிகாவுக்கு கிடைத்துள்ளது.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்த விருது வழங்கும் விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் சஜன் இந்த விருதை அவருக்கு வழங்கினார்.

-இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது. இதையடுத்து அன்ஷூ மாலிகாவுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

logo
Kalki Online
kalkionline.com