மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

மறுமணம் மகிழ்ச்சி அளிக்கிறது: இசையமைப்பாளர் டி.இமான்!

Published on

பிரபல இசையமைப்பாளர் டி. இமான் தனது மறுமணத்துக்குப் பின் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இமான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டதாவது;

சினிமாவில் விளம்பர வடிவமைப்பாளராக பணியாற்றி, மறைந்த உபால்டுவின் மகள் அமலிக்கும் எனக்கும் கடந்த 15-ம் தேதி திருமணம் நடந்து முடிந்தது.

வாழ்வின் கடினமான நேரங்களில் எனக்கு பக்கபலமாக இருந்த என் தந்தைக்கு நன்றி.

இதுவரை நான் சந்தித்த  நெருக்கடிகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ இந்த மறுமணம் மிகப் பெரிய தீர்வாக அமைந்துள்ளது. அமலியின் மகள் நேத்ரா இனி எனது 3-வது மகள்.

என்னுடைய மகள்களான வெரோனிகா மற்றும் பிளஸ்ஸிகா ஆகிய இருவரையும் பிரிந்திருப்பது வருத்தம் அளிக்கிறது. ஆனால் அவர்கள் மீண்டும் என்னிடம் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. 

-இவ்வாறு இசைமைப்பாளர் டி. இமான் தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com