ரஜினிக்கு விருது: வருமான வரி செலுத்தியதில் சாதனை!

ரஜினிக்கு விருது: வருமான வரி செலுத்தியதில் சாதனை!

தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலத்தில் அதிகமாக வருமான வரி செலுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு, விருது வழங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 24) வருமான வரி விழா கொண்டாடப் பட்டது. அந்த வகையில் தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமான வரி செலுத்தியவர்கள் மற்றும் வருமானவரித்துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்ப்பேட்டை மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. .

சென்னை மற்றும் புதுச்சேரிக்கான  வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் ராமசாமி தலைமையில் விழா நடைபெற்றது, இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தெலங்கானா & புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும்  வருமானவரித் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு – புதுச்சேரி மண்டலத்தில் அதிகளவில் வருமானவரி செலுத்திய 4 பேருக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார் ஆளுநர் தமிழிசை. அந்த வகையில் தமிழகத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விருது வழங்கப்பட்டது. நடிகர் ரஜினிகாந்தின் சார்பில்,அவரது  மூத்த மகள் ஐஸ்வர்யா, ஆளுநர் தமிழிசையிடம் இருந்து விருதை பெற்றுக்கொண்டார்.

பின்னர் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ''நடிகர் ரஜினிகாந்த் Super Star மட்டுமல்ல.. Super Tax Payer-ஆகவும் சிறந்து விளங்குகிறார்'' என்று புகழாரம் சூட்டினார்..

இந்நிலையில் நடிகர் ரஜினி, பல ஆண்டுகளுக்கு முன்னர் பேசிய ஓரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ''நடிகர்களில் நான்தான் அதிக வரி செலுத்தி கொண்டிருக்கிறேன்'' என்று அன்றே கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com