அசோக் செல்வனின் ஹாஸ்டல்!

அசோக் செல்வனின் ஹாஸ்டல்!

-ராகவ் குமார்.

சோக் செல்வன் இன்றைய தமிழ் திரையுலகின் இளம் ஹாட் ஸ்டார்! சமீபத்தில் இவர் நடித்த மன்மத லீலை திரைப்படம், பரவலாக வரவேற்பை பெற்றது. காரசார விமர்சனங்களுக்கும் உள்ளானது. அதேபோல் அசோக் செல்வன் நடிப்பில் இம்மாத இறுதியில் வெளிவருவுள்ள 'ஹாஸ்டல்' திரைப்படம் இளைஞர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

'ஹாஸ்டல்' ட்ரைலர் ரிலீஸ் ஆகி பல லட்சம் பார்வையாளர்களை கவர்ந்து உள்ளது.டைட்டிலே பாதி கதையை சொல்கிறது எனலாம். 'ஹாஸ்டல்' என்று டைட்டிலில் எழுதி விட்டு, அதன் கீழே boys only என்று எழுதி உள்ளார்கள்.boys என்ற வார்த்தையை பெருக்கல் குறியால் அடித்து உள்ளார்கள்

டைரக்டர் பெயரிலும் A sumanth ராதாகிருஷ்ணன் film என்று முதல் பாதி ஆங்கிலத்திலும் இரண்டாம் பாதி தமிழிலும் உள்ளது. படத்தின் ட்ரைலரில் நிறைய இரட்டை அர்த்த வசனங்கள் வேறு. இதை பலரும் பலவிதமாக விமர்சித்து கொண்டு உள்ளார்கள். இது போதாது என்று நடிகர் நாசர் வெள்ளை அங்கி அணிந்த கிறிஸ்துவ பாதடராக காட்சியளிக்க, நடிகை பிரியா பவானி சங்கர் பர்தா அணிந்து ட்ரைலரில் தோன்றுகிறார். 

இப்படி மதக் குறியீடுகளை பரபரப்புக்காக டைரக்டர் பயன்படுத்துகிறாராஅசோக் செல்வன் தேர்ந்தெடுத்து நடிக்கும் இது போன்ற அடல்ட்ஸ் ஒன்லி  படங்கள் ஹாஸ்டலிலும் கை தருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com