நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் புதிய படம்!

நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியில் புதிய படம்!
Updated on

டிகர் சூர்யா, இயக்குநர் பாலா கூட்டணியிள் 'சூர்யா41' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக நடிகர் சூர்யா தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்

தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு உயர்த்தும் தரமான படைப்பாளிகளில் ஒருவரான இயக்குநர் பாலாவும், தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகருமான சூர்யாவும் இணைந்து அளித்த  "நந்தா' 'பிதாமகன்" என இரு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்! இப்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சமீபத்தில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வந்த நிலையில், இப்படம் நிறுத்தப்படுவதாக படம் குறித்து சில தவறான தகவல்கள் இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இந்நிலையில் வதந்திகளை பொய்யாக்கும் விதமாக நடிகர் சூர்யா இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்

கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, சிறு இடைவேளைக்கு பிறகு, விரைவில் துவங்குமென படக்குழு தெரிவித்துள்ளது

இதுவரை கண்டிராத முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் சூர்யா நடிக்க, அவருக்கு ஜோடியாக டோலிவுட்டின் டாப் ஹீரோயின் கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார் மமிதாஇசையமைப்பு ஜி.வி.பிரகாஷ். 

logo
Kalki Online
kalkionline.com