‘அவதார்’ படத்தின் 2-ம் பாகம்; டிசம்பர் 16-ல் வெளியீடு!

‘அவதார்’ படத்தின் 2-ம் பாகம்; டிசம்பர் 16-ல் வெளியீடு!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியாகி, உலகெங்கும் பிரமாண்டமான வெற்றி பெற்ற படம்  'அவதார்'. இந்தப் படத்தின் 2-ம் பாகம் இந்த ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி உலகம் முழுக்க சுமார் 160 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 'அவதார் 2'  படத்தின் டிரெய்லர் மே 6-ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டீசர் காட்சிகள் 'சினிமாகான் 2022′ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப் பட்டது. அந்த வகையில்  'அவதார்' 2-ம் பாகத்தின் பெயர் 'Avatar: The Way of Water என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

அவதார் முதல் பாகத்தைப் போல இப்படமும் ஸ்பெஷல் எஃபக்டுகளுடன்  உலக சினிமா வரலாற்றில்  சிறந்த உருவாக்கத்திற்கான  சாதனையைப் படைக்கும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com