3D தொழில்நுட்பத்தில் விக்ராந்த் ரோனா!

3D தொழில்நுட்பத்தில் விக்ராந்த் ரோனா!

Published on

-ராகவ் குமார்.

நான் படத்தின் வில்லனாக மிரட்டிய கிச்சா சுதீப், இப்போது ஹீரோவாக மிரட்டியுள்ள படம் விக்ராந்த் ரோனா

பிரம்மாண்டாமான பொருள் செலவில்ஹாலிவுட் படங்களுக்கு இணையாக 3 D தொழில் நுட்பத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியான சில மணி நேரத்திலேயே சூப்பர் ஹிட்!

குறிப்பாக பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னா ண்டஸ் சுதீப்புடன் இணைந்து ஆடும் ரங்கு ராக்கம்மா பாடலின் நடனம் இளைஞர்களை ஈரத்துள்ளது புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய சொல்றியா நடனம் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது போல ஜாக்குலின் ஆடும் ராக்கம்மா பாடலும் விக்ரந்த் ரோனா வெற்றிக்கு காரணமாக அமையும் என்கிறது சினிமா வட்டாரம்.   

கே ஜி. எப் படத்தில் தனி உலகத்தையும் மக்களையும் உருவாக்கியது போல விக்ரந்த் ரோனா படத்தில் தனி உலகத்தை காட்டி இருக்கிறார்கள்.இந்த உலகத்தில் உள்ள பல்வேறு விஷயங்களை கண்டு பிடிக்கும் அதிகாரியாக நடிக்கிறார் சுதீப்இந்த படம் வெளியான பின்பு இயக்குனர் அனூப் பண்டாரிக்கும் சுதீப்புக்கும் பெரிய அளவில் பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  

கே ஜி எப் வெற்றிக்கு பிறகு தமிழ் ரசிகர்கள் கன்னட படங்களை விரும்பிப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் விக்ராந்த் ரோனா கூடுதல் பலம் சேர்க்க போகிறது என்றால் மிகையில்லை.

logo
Kalki Online
kalkionline.com