
விடாமுயற்சிக்கு பிறகு வெளியான அஜித்தின் விடாமுயற்சி படம் பல விமர்சனத்திற்குள்ளாகி வரும் நிலையில், த்ரிஷாவின் வீடியோ ஒன்று இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இரண்டு வருடங்களாக அப்ப வரும் இப்ப வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த விடாமுயற்சி திரைப்படம் ஒருவழியாக திரைக்கு வந்தது. அஜித் ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியவில்லை. இருந்தாலும், படம் பார்த்த சினிமா ரசிகர்கள் படம் சுமார் என்று விமர்சனம் செய்து வருகின்றனர். சும்மாவே படம் தாமதத்திற்கே மீம்ஸ்கள் வலுக்கும். இப்போ சொல்லவா வேண்டும். இணையதளத்தை ஆக்கிரமித்து விட்டது விடாமுயற்சி மீம்ஸ்.
முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் மற்றும் விஜய்யும் வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வருகின்றனர். அப்படி இருக்கையில் விஜய் வரிசையாக படம் கொடுக்க அஜித்தின் படம் வெளி வராததால் ரசிகர்கள் சற்று கவலையடைந்தனர். போகுமிடமெல்லாம் அப்டேட் அப்டேட் என கதறி வந்தனர். அப்படி பல முயற்சிக்கு பிறகு வெளியான படம் தான் விடாமுயற்சி. படத்தின் டைட்டிலுக்கு ஏற்றவாறு பல சோதனைகளை தாண்டி தான் இந்த படம் வெளியாகியுள்ளது என்றே சொல்ல்லாம். ஒரு பக்கம் விஜய்க்கு வரும் படமே கடைசி படம் என்பதால், அனைவரும் அஜித்தின் பக்கம் திசையை திருப்பினர். ஆனால் அவர்களுக்கு இந்த படம் ஏமாற்றத்தையே கொடுத்தது என்றே சொல்லலாம். படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால் ட்ரோலில் சிக்கி தவிக்கிறது.
படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், த்ரிஷாவின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் தியேட்டரில் படம் முடிந்து எழுந்திருக்கும் போது அவரது ரசிகர் ஒருவர் த்ரிஷா மேம் நடிப்பு சூப்பர் என கத்துகிறார். அதற்கு த்ரிஷாவோ நன்றிகூட சொல்லாமல், 'நல்ல வேளை சூப்பர்னு சொல்றான்' என கிண்டலடித்திருப்பார், இவரே இப்படி நினைக்கும் அளவிற்கு தான் படம் உள்ளதா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.