அவதூறு பரப்பிய விவகாரம்... மன்னிப்பு கேட்க வேண்டும் என த்ரிஷா நோட்டீஸ்!

Trisha
Trisha

தன்னை பற்றி அவதூறு பேசிய விவகாரத்தில், 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தொலைக்காட்சி, யூடியூப் சேனல்கள் மூலம் மன்னிப்பு வீடியோ வெளியிட வேண்டும் என அதிமுக முன்னாள் நிர்வாகி ராஜூவுக்கு நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சேலம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, சமீபத்திய பேட்டி ஒன்றில் கடந்த 2017ஆம் ஆண்டு கூவத்தூர் தனியார் விடுதியில் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தபோது, நடிகைகள் அழைத்து வரப்பட்டதாகக் கூறியதுடன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் கருணாஸ் பற்றி அவதூறு பரப்பும் வகையில் பேசினார். இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவு தெரிவித்து திரைபிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நேற்றைய தினம் இந்த விவகாரத்தில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆன்லைனில் மூலம் நடிகர் கருணாஸ் புகார் அளித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:
சிவகார்த்திகேயனின் அமரன் படத்துக்கு தடை கோரி வெடிக்கும் போராட்டம்!
Trisha

இந்த நிலையில், நடிகை த்ரிஷா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது குறித்து தனது வக்கீல் நோட்டீஸில், தன்னைப் பற்றி அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜு, 24 மணி நேரத்துக்குள் முன்னணி செய்தி நிறுவனங்கள் வாயிலாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த அவதூறு பேசிய விவகாரத்தால், நான்கு நாட்கள் மன உளைச்சலால் பாதிக்கபட்டுள்ளேன். இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். தற்பொழுது, ஏ.வி.ராஜு மன்னிப்பு கேட்காவிட்டால் சிவில் நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நோட்டீஸ் மூலம் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com