குந்தவை இல்லாத 'பொன்னியின் செல்வன்' பிரஸ் மீட்!

திரிஷா
திரிஷா

'திடீரென ஆஸ்பிடலில் அட்மிட் ஆகினார் திரிஷா' என பல்வேறு செய்திகள் சமூக வலைத்தளங்களில் அடிபடுகின்றன. இந்நிலையில் தான் திரிஷா காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார். அதற்கு சில நாள்களுக்கு முன்னர்தான் அவர் விடுமுறைக்காக வெளிநாட்டில் சுற்று பயணம் சென்றதற்கான அழகிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார் திரிஷா.

வெளிநாட்டு விடுமுறையைக் கொண்டாடிட்டு த்ரிஷா சென்னை திரும்பி பிறகு அவர்கள் வீட்டு மாடிப்படி ஏறும்போதுதான் கால் லேசா இடறியதாம். கீழே விழுந்த உடனேயே திரிஷா காலில் வீக்கம் வந்ததால் கவலையடைந்த திரிஷா, அதனை தொடர்ந்து ஆஸ்பிடல் சென்று காலில் கட்டு போட்டுள்ளார். திரிஷாவிற்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

தசை பிடிப்பு
தசை பிடிப்பு

அதையடுத்து காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டும் உள்ளார். அதனால் திரிஷா தற்போது ஓய்வில் இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளது. இதனை தொடந்து எந்த படப்பிடிப்புகளிலும் விழாக்களிலும் திரிஷாவை காணவில்லையென ரசிகர்கள் கவலை கொள்கின்றனர்.

'பொன்னியின் செல்வன்' சக்சஸ் மீட்டில் பங்கேற்ற பலரும் குந்தவையான த்ரிஷாவைத் தேடினார்கள். அவர் வெளிநாட்டில் இருப்பதால் நிகழ்வில் பங்கேற்கவில்லை என பலரும் நினைத்திருந்தார்கள். அதன் பிறகே கல் காயம் காரணமாக கலந்து கொள்ளவில்லை என்கிற தகவல் பரவியது.

குந்தவை சீக்கிரம் குணம் பெறவேண்டும் என்று பொன்னியின் செல்வன் திரிஷா ரசிகர்கள் கவலையுடன் காத்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com