இந்தியாவின் விருந்தோம்பலால் ஈர்க்கப்பட்ட துருக்கி நடிகர்!

இந்தியாவின் விருந்தோம்பலால் ஈர்க்கப்பட்ட துருக்கி நடிகர்!

துருக்கியைச் சேர்ந்தவரான நடிகர் புராக் டெனிஸ் சமீபத்தில் இந்தியா வந்திருக்கிறார். இவர் 2010 - 11 ஆம் ஆண்டுகள் முதல் கல்லூரி டைரி, சுல்தான், மேட்ஸ்ஜிர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலமாக உலகம் முழுவதும் தெரிந்த முகமாகி விட்டார். ஓடிடி தளங்களில் வெளியாகும் பிறநாட்டு வெப்தொடர்கள் அனைத்துமே உலகம் முழுவதும் வாழும் மக்கள் அனைவராலும் காணக்கூடிய வகையில் அமைந்திருப்பதே அதற்கான காரணம். அந்தவகையில் துருக்கி நடிகர் புராக் டெனிஸ்க்கு தற்போது தமிழகத்தின் குக்கிராமங்கள் வரையிலும் கூட ரசிகர்கள் இருக்கலாம். இதை ஓடிடி தளங்களின் வீச்சு என்பதா அல்லது நடிகரின் நடிப்புத் திறனுக்கு கிடைத்த வெற்றி என்பதா?

எது எப்படியாயினும் பொழுதுபோக்கு ஊடகங்களின் தொழில்நுட்ப வளர்ச்சியானது வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களை, நடிகர்களை, தொழில்நுட்பக் கலைஞர்களை ரசனை சார்ந்து நெருங்கி வர வைத்திருப்பது ஆரோக்யமானதாகவே கருதப்படுகிறது.

சமீபத்தில் FICCI ஃப்ரேம்ஸ் (மீடியா & என்டர்டெயின்மென்ட் (M&E) தொழில்துறையின் சர்வதேச மாநாடு) நிகழ்ச்சியில் பேசும் போது அவர் இந்தியா மற்றும் இங்குள்ள பாலிவுட் நடிகர்கள், நடிகைகள், இந்திய உணவு, இந்தியாவின் தட்பவெப்பம் குறித்தெல்லாம் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.

FICCI Frames நிகழ்வுக்கு முன்பு யாஷ் சோப்ரா தலைமை தாங்கினார், கரண் ஜோஹர் இணைத் தலைவராக இருந்தார். இந்த நிகழ்வை இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படுகிறது.

இதில் பேசும் போது, இதுவே தனது முதல் இந்திய வருகை எனக்குறிப்பிட்ட புராக் டெனிஸ், இந்தப் பயணத்தில் தான் எதிர் கொண்ட மிகச்சிறந்த இந்திய விருந்தோம்பலானது மீண்டும் ஒரு முறை இந்தியாவுக்கு வரச் சொல்லி தன்னை கவர்ந்து விட்டதாகத் தெரிவித்திருந்தார். அத்துடன், இங்கு வெயில் மிக கடுமையாக இருப்பதாகக் கூறிய புராக், தான் பார்த்து ரசித்த இந்தித் திரைப்படம் பிகே என்றும் கூறி இருந்தார். பிகே பார்த்த பிறகு அதில் நடித்திருந்த ஆமிர் கானின் ரசிகனாகி விட்டதாகவும், ஒருவேளை பின்னாட்களில் இந்திய துருக்கிய கொலாபரேஷனில் திரைப்படங்கள் இயக்கப்படும் சாத்தியங்கள்

இருக்குமெனில் ஆமிர் கான், ஷாரூக்கான், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட நடிகர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். தனக்குப் பிடித்த இயக்குநராக புராக் குறிப்பிட்டது பிகே இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com