புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்காத இரண்டு மாஸ் ஹீரோக்கள்!

No Smoking
Tamil Cinema
Published on

அன்றைய கால தமிழ் சினிமாவில் நடிகர் ராமராஜன் நடிக்கும் போது புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என தீர்மானமாக இருந்து, அதை செய்தும் காட்டினார். அவருக்குப் பிறகு இன்றைய காலகட்டத்தில் வளர்ந்து வரும் இரண்டு மாஸ் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்த்து வருகின்றனர். யார் அந்த நடிகர்கள்? ஏன் இவர்கள் மட்டும் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கின்றனர் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலகட்டத்தில் வெளிவரும் திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளும், மது குடிக்கும் காட்சிகளும் அதிகளவில் காட்டப்படுகின்றன. இது படம் பார்க்க வரும் இளைய தலைமுறையினரை பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் அவ்வப்போது குரல் எழுப்பி வருகின்றனர். முக்கியமாக மாஸ் நடிகர்கள் புகைப்பிடிக்கும் காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

தமிழ் சினிமா எத்தனையோ நடிகர், நடிகைகளைக் கண்டு விட்டது. அதில் ஒரு சிலர் மட்டும் ரசிகர்கள் மனதில் குறிப்பிடத்தக்க அளவில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள். சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல், விஜய் மற்றும் அஜித் என இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். இருப்பினும் மாஸ் நடிகர்கள் பலரும் படத்தின் தேவைக்காக மது குடிக்கும் காட்சிகள் மற்றும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பது வழக்கம். ஆனால் வளர்ந்து வரும் நடிகர்களான கார்த்தி மற்றும் சிவகார்த்திகேயன் ஆகிய இருவரும் இன்றுவரை புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் நடிகர் ராமராஜனுக்குப் பிறகு புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்காத உச்ச நட்சத்திரங்கள் இவர்கள் இருவர் தான்.

பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கார்த்தி, ஆயிரத்தில் ஒருவன், நான் மாகான் அல்ல, பையா, சிறுத்தை, கொம்பன், மெட்ராஸ், கைதி, சர்தார், தீரன் அதிகாரம் 1, பொன்னியின் செல்வன் மற்றும் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். கிராமத்துக் கதைகளில் மிகவும் கச்சிதமான நடிகராக பார்க்கப்படும் கார்த்தி, நகர வாழ்க்கைக்கு ஏற்ற கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்துள்ளார்‌. சினிமா வாழ்க்கை தொடங்கியதில் இருந்து இன்று வரை எந்தப் படத்திலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்காத நடிகர்களில் கார்த்தியும் ஒருவராக இருக்கிறார்.

Mass Actors
No Smoking
இதையும் படியுங்கள்:
தல இல்லை; கேப்டன் தான்! ஏ.ஆர்.முருகதாஸ் சொன்ன ருசிகரத் தகவல்!
No Smoking

விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற கலக்கப்போவது யாரு, ஜோடி நம்பர் 1 போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களுக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அதன்பிறகு அது இது எது என்ற காமெடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, வெள்ளித்திரையில் மெரினா படத்தின் மூலம் தடம் பதித்தார். தொடர்ந்து சில காமெடி படங்களில் நடித்து குழந்தை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டார் சிவகார்த்திகேயன். அவ்வரிசையில் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். தொடர்ந்து எதிர்நீச்சல், கனா, வேலைக்காரன், டாக்டர், மாவீரன், டான், அயலான் மற்றும் அமரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை அறவே வெறுக்கும் இவர், இன்றுவரை அதுபோன்ற காட்சிகளில் நடித்ததில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com