வாரிசு திரைப் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது படத்தின் சென்சார் முடிக்கப்பட்டு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது. அஜித்தின் துணிவு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில் விஜய் படத்திற்கு தற்போது யூ சான்றிதழ் கிடைத்துள்ளது படக்குழுவினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாரிசு திரைப் படத்தின் ரன் டைமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வாரிசு திரைப் படம் 2 மணிநேரம் 49 நிமிடங்கள் ஓடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் சான்றிதழ், ரன்டைம் மற்றும் ட்ரெயிலர் குறித்த அப்டேட்கள் விஜய் ரசிகர்களை டபுள் டமாக்கா என பெரும் கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 2023 புத்தாண்டு அன்று சன் டிவி-யில் ஒளிபரப்பான வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா தற்போதும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படம் நேற்று காலை தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. படத்தைப் பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தின் நீளம் 2 மணி நேரம் 49 நிமிடம் என அறிவித்துள்ளது இது தல அஜித்தின் துணிவு திரைப்படத்தை விட நீளம் மிக அதிகம் என விஜய் ரசிகர்கள் மகிழ்ந்து வருகின்றனர்.
பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக ஜனவரி 12 ஆம் தேதி வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகும் எனத் தெரிகிறது. தற்போது வாரிசு படத்தின் ட்ரைலருக்காக காத்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். வம்ஷி பைடிபள்ளி இயக்கியிருக்கும் வாரிசு திரைப்படம், உணர்வு மற்றும் ஆக்ஷன் நிறைந்த ஒரு ஃபேமிலி பொழுதுபோக்கு படமாக இருப்பதாலேயே அந்த திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.