வரப்போகுது பாகுபலி அனிமேஷன் வெப் சீரிஸ்: எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்!

Baahubali Animated Web Series
Baahubali Animated Web Series

தெலுங்கு இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த பாகுபலி திரைப்படம் இந்தியா முழுவதும் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் இப்படத்தின் இரண்டாம் பாகம் 2017 ஆம் ஆண்டு வெளிவந்து வசூலில் மெகா வெற்றியைப் பதிவு செய்து ரூ.1,000 கோடி வசூலைத் தாண்டியது. இதனைத் தொடர்ந்து, தற்போது பாகுபலி திரைப்படம் அனிமேஷன் சீரிஸாக வெளிவர இருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு ஒன்றை இயக்குநர் ராஜமௌலி ஏற்கனவே X தளத்தில் தெரிவித்துள்ளார்.

பாகுபலி திரைப்படம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் தான் பான் இந்தியா படங்கள் தொடர்ந்து வர முதல் படியாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. பாகுபலி படத்திற்கு பிறகு தான், நடிகர் பிரபாஸ் மற்றும் ராஜமௌலியின் மார்க்கெட் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இப்படத்தில் பிரபாஸ், அனுஷ்கா, சத்யராஜ், தமன்னா மற்றும் பல நடிகர்கள் தங்களின் திறனை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். பாகுபலி திரைப்படத்தின் அனிமேஷன் சீரிஸ் விரைவில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. ஆனால், சில காரணங்களால் இதன் வெளியீடு தள்ளிப் போனது. தற்போது மீண்டும் இது பற்றிய அறிவிப்பு வெளிவந்து, டிரைவர் வெளியாகி உள்ளது.

பாகுபலி திரைப்படத்தின் அனிமேஷன் சீரிஸ் குறித்த அப்டேட் ஒன்றை இயக்குநர் ராஜமௌலி ஏப்ரல் 30 ஆம் தேதி X தளத்தில் வெளியிட்டார். அதில் “மகிழ்மதியின் மக்கள் அவருடைய பெயரை உச்சரிக்கும் பொழுது உலகில் இருக்கும் எந்த சக்தியாலும் அவர் மீண்டும் திரும்பி வருவதைத் தடுக்க முடியாது. பாகுபலி: கிரௌன் ஆப் பிளட் என்ற அனிமேஷன் சீரிஸ் விரைவில் வெளியாகும்,” என சிறு வீடியோ ஒன்றை இணைத்து பதிவிட்டிருந்தார் ராஜமௌலி. இந்நிலையில் பாகுபலி திரைப்படத்தின் முன்கதை அனிமேஷன் வடிவில், வெப் தொடராக வருகின்ற மே 17 ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

மேலும், கதாநாயகன் பாகுபலி மற்றும் பல்வால்தேவாவின் வாழ்க்கையில் யாரும் அறிந்திடாத பல திருப்பங்கள் மற்றும் மகிழ்மதி சாம்ராஜ்ஜியத்தை மையப்படுத்தி இந்த அனிமேஷன் தொடர் பேசும். இந்த சீரிஸின் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவந்து பல வருடங்கள் ஆன பின்னர், இப்படத்தின் அனிமேஷன் சீரிஸ் வெளிவர இருக்கிறது. பாகுபலி திரைப்டத்தைப் போலவே அனிமேஷன் சீரிஸும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியத் திரையுலகம், தென்னிந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க முக்கிய காரணமாக இருந்த திரைப்படம் பாகுபலி. இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு இசையமைப்பாளர் கீரவாணியும் பெரும் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com