குட் நைட் படத்தின் நாயகன் மணிகண்டனின் புது படம் குறித்த அப்டேட்!

குட் நைட் படத்தின் நாயகன் மணிகண்டனின் புது படம் குறித்த அப்டேட்!
க.இப்ராகிம்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

குட் நைட் திரைப்படத்தினுடைய கதாநாயகன் மணிகண்டன் தற்போது நடித்து வரும் புதிய படத்தினுடைய படப்பிடிப்பு காட்சிகளை போட்டோவாக தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

ஜெய் பீம் திரைப்படத்தின் ராசாகண்ணு கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் மணிகண்டன். ஜெய் பீம் திரைப்படத்திற்கு முன்பு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மணிகண்டனுக்கு பெரிய அளவில் பெயரை பெற்று தரவில்லை. ஆனால் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பின்பு மணிகண்டனை தமிழ் திரை உலகில் பேசப்படும் நடிகர்களின் ஒருவராக மாற்றியது. அதன் பிறகு குட் நைட் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். குட் நைட் திரைப்படமும் விமர்சன ரீதியான வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் மணிகண்டன் காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லு கருப்பட்டி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இது மட்டுமல்லாது பல குரலில் பேசும் அசத்தும் திறமை கொண்டவர்.

இந்த நிலையில் நடிகர் மணிகண்டன் புதுமுக இயக்குனர் பிரபு ராம் இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

அதோடு கௌரி பிரியா ரெட்டி, கண்ணா ரவி உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.தற்போது மணிகண்டன் அந்த புதிய படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com