இன்று வெளியாகும் மோகன்லாலின் 360 வது படத்தின் அப்டேட்!

Actor mohanlal
Actor mohanlal

மோகன்லால் தனதுப் பெயரிடப்படாத 360வது படத்தில் இயக்குனர் தருண் மூர்த்தியுடன் இணையவுள்ளார். L360 என்றப் பெயருடன் அறிவிப்பு போஸ்டரை நேற்று வெளியிட்டது படக்குழு. இதனையடுத்து படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

லிஜோ ஜோஸ் பெல்லிஸேர்ரி இயக்கத்தில் வெளியான 'மலைக்கோட்டை வாலிபன்' என்றப் படத்தில் நடித்த மோகன்லால், இந்த ஆண்டின் சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்துத் தற்போது தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன் லால் தனது அடுத்த படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தருண் மூர்த்தி கடந்த 2021ம் ஆண்டு பாலு வர்கீஸ் மற்றும் மமிதா பைஜு ஆகியோரை வைத்து 'ஆப்ரேஷன் ஜாவா' என்றப் படத்தை இயக்கி சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் 2022ம் ஆண்டு 'சௌதி வெள்ளக்கா' என்றப் படத்தை இயக்கினார். அதன்பின்னர் பினு பப்பு எழுத்தில் ஒரு படம் இயக்கவுள்ளார் என்றச் செய்திகள் வந்தன. அந்தவகையில் தற்போது மோகன்லால் வைத்து பெயரிடப்படாத L360 என்ற படத்தை இயக்கவுள்ளதாக நேற்று படக்குழு அறிவித்தது.

இந்தப் படத்தை Rejaputhra visual media என்றத் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கு முன்னர் இந்தத் தயாரிப்பு நிறுவனம் 2 countries, Koode, Left Right Left, Tamaar Padaar போன்ற மலையாளப் படங்களைத் தயாரித்துள்ளது.

1980ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமான மோகன்லால் தற்போது 360 வது படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார். ஒரு ஆண்டிற்கு அதிக படங்கள் நடிப்பதில் பெயர் போனவர் இவர். தற்போது இந்த ஆண்டு இவருக்கு லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகமான L2 – எம்புரான், வ்ருஷாபா, ராம், ராம்பான், பர்ரோஜ் ஆகிய படங்கள் லைனப்பில் உள்ளன.

இந்தப் படங்களில் லூசிஃபர் படத்தின் பாகம் 2 ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு படமாக உள்ளது. ஏனெனில் இதன் பாகம் 1 2019ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. டொவினோ தாமஸ், பிரித்வி ராஜ், மோகன் லால் இணைந்து நடித்த இப்படம் 30 கோடி பட்ஜட்டில் எடுக்கப்பட்டு சுமார் 200 கோடி வசூலை ஈட்டி மலையாள சினிமாவில் வரலாற்று சாதனை படைத்தது.

இதையும் படியுங்கள்:
நேர்காணல்: 'J.பேபி' திரைப்படம் குறித்து மாறன் வருத்தம்!
Actor mohanlal

ஆகையால் இந்த ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் ரசிகர்களைத் திருப்தி படுத்தாததால் மோகன்லாலின் அடுத்தப் படங்களுக்கு எதிர்பார்ப்புக் கூடி நிற்கிறது.

அந்தவகையில் தற்போது தருண் மூர்த்தி இயக்கும் மோகன்லாலின் 360வது படத்திற்கான அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றுப் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் X தளத்தில் மோகன்லால் படத்தின் அப்டேட்டிற்கு அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com