'V3' விமர்சனம் : தீர்வு சரியா?!

 வரலக்ஷ்மி சரத்குமார்
வரலக்ஷ்மி சரத்குமார்
Published on

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நம் நாட்டில் இதற்கு தீர்வுதான் வேண்டும் தண்டனை அல்ல என்ற கருத்தை முன் வைக்கிறது 'V3'. அமுதாவாணன் 'V3' படத்தை இயக்கி உள்ளார். இரவு வீடு திரும்பும் விந்தியாவை ஐந்து பேர் கொண்ட குழு பாலியல் வன்புணர்வு செய்கிறது. விந்தியாவின் தந்தையும், தங்கையும் சேர்ந்து தேடுகிறார்கள். எரிந்து போன விந்தியாவின் உடலை காவல் துறை கண்டுபிடிக்கிறது. மீடியாவில் இந்த விஷயம் பெரிதாக, ஆளும் அரசின் அழுத்ததால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்கிறது காவல் துறை.

என்கவுன் டர் செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தங்களின் மகன்கள் நிரராதிகள் என்று மனித உரிமை ஆணையத்தின் கதவை தட்டுகிறார்கள். ஆணையமும் சிவகாமி என்ற அதிகாரியை நியமிக்கிறது. சிவகாமி இது போலி என் கவுன்டர் என்றும் சுட்டு கொள்ளப்பட்ட இளைஞர்கள் அப்பாவிகள் என்று கண்டுபிடிக்கிறார். விந்தியா என்ன ஆனார்? இந்த பிரச்சனைகளுக்கு என்னதான் முடிவு என்று படம் செல்கிறது.

V3
V3

படத்தின் காட்சி அமைப்பும், கதையை கொண்டு செல்லும் விதமும் மிக சாதாரணமாக இருக்கிறது. ஒளிப்பதிவும், எடிட்ங்கும் சரியாக ஒன்றிணையவில்லை. அப்பாவாக நடிக்கும் ஆடுகளம் நரேன், சிவகாமியாக நடிக்கும் வரலக்ஷ்மி சரத்குமார், விந்தியாவாக நடிக்கும் பாவனா, போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பொன்முடி என அனைவரும் கேரக்டர்க்கு ஏற்ற நடிப்பை தந்துள்ளார்கள்.

 வரலக்ஷ்மி சரத்குமார்
வரலக்ஷ்மி சரத்குமார்

பாலியல் குற்றங்களை தடுக்க பாலியல் தொழிலை அங்கீகரிக்க வேண்டும் என்ற கருத்தை இறுதியில் முன் வைக்கிறார் டைரக்டர். பாலியல் தொழில் அங்கீகரிக்கபட்ட வட இந்திய மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் அதிகமாக உள்ளதை இயக்குனர் மறந்தது ஏனோ?சில ஆண்டுகளுக்கு முன் நிர்பயா என்ற பெண் பாலியல் வன்கொடுமையால் டெல்லியில் கொல்லப்பட்டாள். அதே டெல்லியில் பாலியல் தொழில் நடக்கிறது. இதற்கு என்ன சொல்ல போகிறார் டைரக்டர். 'V3'- தவறான தீர்வு

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com