மாமன்னன் படத்திற்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடிக்க உள்ள புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எப்போது சிரிப்பு நாயகனாக திகழ்ந்த வடிவேலு இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். உதயநிதியின் தந்தையாக நடித்த இவர் சட்டப்பேரவை தலைவராகும் வரை தனது ரோலை அழகாக நடித்திருப்பார்.
இந்த படத்தில் ஃபகத் பாசில், வடிவேலு கூட்டணி சிறப்பாக அமைந்திருந்தது. இதனை பலரும் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் இருவரின் கூட்டணியில் அடுத்த படம் ஒன்று உருவாக உள்ளது. ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார்.
இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஆறு மனமே படத்தை இயக்கியிருந்தார். 2014-ம் ஆண்டு திலீப் நடிப்பில் மலையாளத்தில் வெளியான வில்லாலி வீரன் படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
படத்துக்கு இன்னும் தலைப்பிடப்படவில்லை. கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி வெளியான இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.