மாமன்னனை தொடர்ந்து மாரீசன்.. வடிவேலு - பகத் பாசில் கூட்டணியில் அடுத்த படம் இதுதான்!

ஃபஹத் ஃபாசில் வடிவேலு
ஃபஹத் ஃபாசில் வடிவேலு

மாமன்னன் படத்திற்குப் பிறகு ஃபஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்து வரும் படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. எப்போது சிரிப்பு நாயகனாக திகழ்ந்த வடிவேலு இந்த படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார். உதயநிதியின் தந்தையாக நடித்த இவர் சட்டப்பேரவை தலைவராகும் வரை தனது ரோலை அழகாக நடித்திருப்பார். இந்த படத்தில் ஃபகத் பாசில், வடிவேலு கூட்டணி சிறப்பாக அமைந்திருந்தது. இதனை பலரும் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் இருவரின் கூட்டணியில் அடுத்த படம் ஒன்று உருவாகி வருகிறது.

ஆர்பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98-வது படமாக உருவாகும் இப்படத்தை சுதீஷ் சங்கர் இயக்குகிறார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ஆறு மனமே படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு மாரீசன் என தலைப்பிடப்பட்டுள்ளது. மாமன்னனை தொடர்ந்து மாரீசனில் இணைந்துள்ள வடிவேலு, பகத் பாசிலால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பணிகள் பூஜையுடன் தொடங்கின. கலைசெல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com