வகையாக மாட்டிக்கொள்ளும் வடிவேலு... சத்தமில்லாமல் ஆப்பு வைத்த டைரக்டர்!

வகையாக மாட்டிக்கொள்ளும் வடிவேலு... சத்தமில்லாமல் ஆப்பு வைத்த டைரக்டர்!

இயக்குநர் ஷங்கருடன் ஏற்பட்ட பிரச்சினையால் பல காலம் சினிமாவில் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டவர் நடிகர் வடிவேலு. தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ள நிலையில், இனியாவது பிரச்சினைகளில் ஈடுபடாமல் அடங்கி இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார்.

தற்போது படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் வடிவேலு, சற்றும் எதிர்பாராத வகையில் மீண்டும் அடங்கியிருக்காமல் பிரச்சினைகளில் மாட்டிக்கொண்டு வருகிறாராம். அதாவது நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' திரைப்படத்தின் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. அதேசமயம், பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி 2' படத்திலும் வடிவேலு நடித்து வருகிறார். இப்படத்தில் இரண்டு நாட்களாக படப்பிடிப்பு தாெடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வடிவேலுக்கு வந்தது வினை. ஒரே நாளில 'நாய் சேகர் ரிட்டன்ஸ்', 'சந்திரமுகி 2' படத்தின் ஷூட்டிங் இருந்துள்ளது. இதனால் நான் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' ஷூட்டிங்கிற்கு செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

இயக்குனரோ, இன்னும் ஒரு நாள் மட்டுமே நீங்கள் இடம்பெறும் காட்சிகள் எடுக்கப்பட வேண்டி இருக்கிறது. அதனால் அதையும் முடித்துக் கொடுத்துவிட்டால், மேற்கொண்டு உங்களை தொந்தரவு செய்ய மாட்டோம் என கூறியிருக்கிறார்.

ஆனால் அவரது பேச்சிற்கு செவி கொடுக்காத வடிவேலு நான் சென்றே தீருவேன் என்று கூறி படப்பிடிப்பை விட்டு கிளம்பி உள்ளார்.

தான் இவ்வளவு தெளிவாக கூறியும் அதை பொருட்படுத்தாமல் வடிவேலு சென்றதால் அவர்மீது கோபமடைந்த பி வாசு, சைலன்டாக, அந்தப் படத்தில் வடிவேலு நடிக்கவிருந்த அந்த முக்கிய காட்சியையும் படத்திலிருந்து தூக்கி இருக்கிறார்.

வடிவேலுவின் இக்காரியத்தால் மனமுடைந்த ஒட்டுமொத்த படக்குழுவினரும் வடிவேலு மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

பிரச்சினை மேல் பிரச்சினையில் மாட்டிக்கொண்டு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் வடிவேலுவைப் பற்றிதான் தற்போது கோலிவுட்டில் அரசல் புரசலாக பேசி வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com