வைகை புயல் வடிவேலு ‘ரிட்டன்ஸ்’ !

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் வடிவேலு பாடிய 'அப்பத்தா' பாடல்!
நாய் சேகர் ரிட்டன்ஸ்
நாய் சேகர் ரிட்டன்ஸ்

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தற்போது அதன் படக்குழு அறிவித்துள்ளது . சந்தோஷ் நாராயணன் இசையில்உருவாகி உள்ள இந்த 'அப்பத்தா' பாடலை நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்களே பாடி உள்ளார் என்றும் கூறப்படுகிறது .

தமிழில் மிகப் பிரமாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்குபிறகு வைகைப்புயல் வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த பாடலை வடிவேலு பாடியுள்ளார். இந்த பாடலை அசல் கோலார் மற்றும் துரை எழுதி உள்ளனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

வடிவேலு
வடிவேலு

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத காமெடி கூட்டணியை தந்த, நடிகர் இயக்குநர்பிரபுதேவாவும், வைகைப்புயல் வடிவேலுவும் இப்படத்தில் ஒரு பாடலில் இணைந்துபணியாற்றி வருகிறார்கள்.

தமிழ் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் வைகைப்புயல் வடிவேலு, அவரது காமெடி இல்லாத வீட்டு திரையே தமிழ்நாட்டில் கிடையாது எனலாம். இணைய உலகத்தில் வைகை புயல் வடிவேலு காமெடி இல்லாத இடமே கிடையாது. சமூகவலைதளமே வடிவேலு காமெடி மீம்ஸில் தான் இயங்கி வருகிறது.

வடிவேலு
வடிவேலு

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் அறிவிப்பு வெளியான போதே படத்திற்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் டைட்டிலோடு வெளியான மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com