'வால்டேர் வீரய்யா' படப் பாடல் லிரிக்கல் வீடியோ!

'வால்டேர் வீரய்யா' படப் பாடல் லிரிக்கல் வீடியோ!

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா.' இயக்குநர் பாபி கொல்லி (கே.எஸ்.ரவீந்திரன்) இயக்கத்தில் தயாராகி வரும் இந்தப் படத்தின் டைட்டிலுக்கான டீசர் சமீபத்தில் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில், ‘இப்படத்தில் இடம்பெற்றிருக்கும் முதல் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியாகும்’ என்ற ஒரு புதிய தகவலை தனது இணைய பக்கத்தில் அறிவித்திருக்கிறார் இப்படத்தின் இசையமைப்பாளர் 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீபிரசாத். மேலும், அவர் தனது இணைய பக்கத்தில், 'மெகா ஸ்டார் சிரஞ்சீவி, நடிகை ஊர்வசி ரௌத்லா இணைந்து கலக்கியிருக்கும் இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ இந்த வாரம் வெளியிடப்படும்' என பதிவிட்டிருக்கிறார்.

நடிகர் சிரஞ்சீவியின் அதிவேக நடனத்துக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும். இந்நிலையில், இப்படத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌத்லாவும் இணைந்து நடனமாடி இருக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவிசங்கர் ஆகியோரின் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தின் முதல் பாடலின் சிங்கிள் ட்ராக் வெளியாகும் செய்தி அறிவிக்கப்பட்டிருப்பதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com