தாய்லாந்தில் ஜோராக நடந்து முடிந்த வரலட்சுமி திருமணம்..!

varalaxmi sarathkumar marriage
varalaxmi sarathkumar marriage

வரலட்சுமி சரத்குமார் திருமணம் தாய்லாந்தி கோலாகலமாக நடைபெற்ற நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சரத்குமாரின் மகளும், நடிகையுமான வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்தக்கட்ட வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்க உள்ளார். கடந்த 2012ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான, ' போடா போடி' படத்தில் நடித்தார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றபோதிலும், அதைத் தொடர்ந்து வரலட்சுமிக்கு பட வாய்ப்புகள் பெரிதாகக் கிடைக்காமல் போனது. தமிழ்ப் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற மொழி படங்களில் அவர் நடித்து வந்தார்.

தொடர்ந்து, அடுத்தடுத்து போல்ட் கதாபாத்திரங்களை எடுத்து நடித்து அசத்தி வந்தார். இவருக்கான வில்லி கதாபாத்திரம் பக்காவாகப் பொருந்த அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், 14 வருடங்கள் பழகிய நண்பரும், தொழிலதிபருமான நிக்கோலய் சச்தேவ் என்பவரை தான் கரம் பிடித்துள்ளார்.

நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் அவரது காதலர் நிக்கோலை சச்தேவ் ஆகியோரின் திருமண கொண்டாட்டம் சென்னையில் கடந்த வாரம் கலைகட்டி இருந்தது. வரலட்சுமி - நிக்கோலாய் திருமண நிச்சயதார்த்தம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தம் இருவரின் குடும்பத்தினர் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, நடிகை வரலட்சுமியின் திருமண கொண்டாட்டம் ஆடம்பரமாக 5 நாட்கள் நடைபெற்றது. மெஹந்தி, சங்கீத், வரவேற்ப்பு என பல நாட்கள் நடந்த கொண்டாட்டத்தில் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இதையடுத்து, திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் லீலா பேலஸில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. வரலட்சுமி - நிக்கோலாய் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முதல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மற்றும் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா முன்னணி நட்சத்திர நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள்.

இதையும் படியுங்கள்:
கோடியில் வசூலை அள்ளிய கல்கி படம்... ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா?
varalaxmi sarathkumar marriage

இந்நிலையில் தாய்லாந்தில் திருமணம் தற்போது நடந்து முடிந்து இருகிறது. அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் வரலட்சுமிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com