வாரிசு திரைப்படம் OTT வெளியீட்டு தேதியில் மாற்றம்...!

varisu movie
varisu movie

வாரிசு திரைப்படம் இந்த மாதம் OTT தளங்களுக்கு வர இருப்பதாக தகவல் வெளியானது. நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் முன்னணி OTT நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 10-ம் தேதி திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அந்த தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதில் காதல், ஆக்ஷன் மற்றும் குதுன்ப சென்டிமென்ட் காட்சிகள் நிறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், அதன் OTT வெளியீட்டிற்காக விஜய் ரசிகர்கள் மற்றும் திரைபார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

நடிகர் விஜய் வைத்து வம்ஸி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் 290 கோடிகளை வசூலித்தது . ரசிகர்கள் மற்றும் குடும்ப பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனையடுத்து தளபதி விஜய்யும் 'வாரிசு' படக்குழுவினருக்கு பிரபல நட்சத்திர ஹோட்டலில் சிறப்பு விருந்து அளித்துள்ளார். அதன் ஒருபகுதியாக சென்னையில், 'வாரிசு' படத்தின் succes meet நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், ஷாம், சங்கீதா உட்பட படக்குழுவினர் பலரும் பங்கேற்றனர்.விஜய், பிரகாஷ் ராஜ் தவிர 'வாரிசு' படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Actor vijay
Actor vijay

ஆனால், வாரிசு பிப்ரவரி 22 முதல் இந்தியாவில் Amazon Prime மற்றும்வெளிநாடுகளில் SunNXT இல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடித்த'வாரிசு' திரைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி விமர்சகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்குகளை அதிரவைத்த 'வாரிசு' தற்போது OTT-ல் களமிறங்க தயாராகியுள்ளது. பட நிறுவனத்தின் அறிக்கைகளின் படி, படம் பிப்ரவரி மாதத்திற்குள் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com