vaththi
vaththi

பிரபல OTT யில் வெளியாகவுள்ள "வாத்தி"!

Published on

"வாத்தி" இயக்குனர் வெங்கி அத்லூரி இயக்கத்தில் தனுஷ், சம்யுக்த மேனன், சாய் குமார் என தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்ய இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் வெங்கட் அல்லூரி தெலுங்கு இயக்குனருடன் கைகோர்த்து நடித்த தனுஷ் இந்த படத்தை தெலுங்கிலும் 'சார்" என்ற தலைப்பில் ரிலீஸ் செய்தார். இதன் மூலம் தன்னுடைய மார்க்கெட்டை தெலுங்கில் நிலை நிறுத்த தனுஷ் முயற்சி எடுத்தார்.இந்த நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்திய வாத்தி திரைப் படத்தின் ஒரு அப்டேட் கிடைத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் 17-ம் தேதி தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை இந்தப் படம் பெற்றது.

சுமார் 35 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப் பட்ட இந்தப் படம் வெளியான 17 நாட்களுக்குள்ளேயே 100 கோடி ரூபாய் வசூலித்தது என படக்குழு அறிவித்தது. இப்போது இந்தப் படம் நெட் ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்த மாதம் 17-ம் தேதி வெளியாக இருப்பதைப் படக்குழு அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்த ’வாத்தி’ திரைப்படத்தை அடுத்து தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இதன் மூலம் வாத்தி திரைப்படம் ஓடிடியிலும் பெரிய சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

.

logo
Kalki Online
kalkionline.com