வட்டார வழக்கு திரைப்பட விமர்சனம்!

Vattara Vazhakku Movie Review
Vattara Vazhakku Movie Review
Published on
இளையராஜாவின் இசைராஜாங்கத்தில் ஒரு கிராமத்து வாழ்வியல்.(3 / 5)

இளையராஜா இசையில் காதல், கிராமம் என இப்படி ஒரு படம் வந்து பல வருடங்களாகி விட்டது என்று உணர்த்தும் விதமாகவும்  உணர்வுகளை சொல்லும் படமாக வந்துள்ளது கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கியுள்ள 'வட்டார வழக்கு' திரைப்படம்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக  காழ்ப் புணர்ச்சி நிலவி வருகிறது. ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம ஹீரோ சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை  வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர்.

படத்தில் சில குறிப்பிட்ட நடிகர்களை தவிர பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் இடத்தில் உள்ள மக்களையே நடிக்க வைத்துள்ளார் டைரக்டர். இதுவே இப்படத்திற்கு பெரிய பலம் என்று சொல்லலாம். இவர்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் நம்மை ஒரு லைவ் கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.        ரவீனா ரவி இதற்கு முன்பு லவ் டுடே, மாமன்னன் உட் பட  பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் இந்த வட்டார வழக்கு படத்தில் மண்ணின் பெண்ணாக, கிராமத்து டீச்சராக, தொட்டிச்சி  கதா பாத்திரத்தில் ஒரு சிறந்த நடிப்பை தந்துள்ளார்.  இப்படத்தின் ஹீரோ சந்தோஷ் ஏற்கனவே டுலெட் படத்தில் நடித்தவர். இப்படத்தில் ஒரு முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரியாக கடத்தி விடுகிறார்.

இதையும் படியுங்கள்:
சலாரை கைப்பற்றியது நெட்பிளிக்ஸ்... ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா?
Vattara Vazhakku Movie Review

இளையராஜா, சில இடங்களில் எந்த வித பின்னணி இசையையும் தராமல்  உணர்வுகளின் வலியை சரியாக தந்து விடுகிறார்.  பின்னணி இசையில் தான் எப்போதும் முன்னனிதான் என்பதை நிரூபித்து விடுகிறார் இளையராஜா. படத்தின் கதை 1987 கால கட்டத்தில் நடக்கிறது. இந்த காலகட்டத்தில் ராஜாவின் இசையில் வெளியான சில பாடல்கள் அவ்வப்பொழுது பின்னணியில் ஒலிக்கிறது. இதுவும் கூட நன்றாக உள்ளது. சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் வெப்பம் தெரிகிறது.

மாற்று சினிமாவை விரும்புபவர்களுக்கும், ஒரு யதார்த்த படத்தை ரசிப்பவர்களுக்கும் வட்டாரவழக்கு சரியான தேர்வாக அமையும்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com