
நடிகை வனிதா விஜயகுமார் ’வைஜெயந்தி ஐபிஎஸ’ என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழில் வெளியான பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்து பெயர் பெற்றவர் வனிதா விஜயகுமார். இந்த நிலையில் தற்போது முன்னணி தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார். அதே நேரம் தற்போது தொடர்ந்து பட வாய்ப்புகள் வருவதாலும் நடிப்பிலும் பிசியாக இருந்து வருகிறார்.
வனிதா விஜயகுமார் மகள் ஜோவிகா பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டுள்ளார். வனிதா விஜயகுமார் தற்பொழுது போலீஸ் கதாபாத்திரத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
90களின் காலகட்டத்தில் நடிகை விஜயசாந்தி நடிப்பில் வெளியான வைஜெயந்தி ஐபிஎஸ் திரைப்படம் அவருக்கு மிகப்பெரும் அளவில் பெயரை பெற்று தந்தது. ஏன் தற்போது வரை விஜயசாந்திக்கான முக்கிய அடையாள படமாக வைஜெயந்தி ஐபிஎஸ் படமே திகழ்கிறது. இந்த நிலையில் நடிகை வனிதா விஜயகுமாரும் அதே பெயரில் வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வனிதா விஜயகுமாருக்கு திரைத்துறையில் முக்கிய வாய்ப்பு தற்போது தேடி வந்திருக்கிறது. இதை வனிதா விஜயகுமார் எந்த அளவிற்கு பயன்படுத்திக் கொண்டு பயன் பெறுவார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.