
1992ம் ஆண்டு பிரபு நடித்து வெளியான 'செந்தமிழ்ப்பாட்டு' படத்தின் மூலம் சினிமாத் துறையில் அறிமுகமானவர் நடிகர் கசான் கான். இவர் மாரடைப்பு காரணமாக நேற்று காலமானார்.
நடிகர் கசான் கான் தமிழில் 1992ல் அறிமுகமாகி 'கலைஞன்', 'சேதுபதி ஐபிஎஸ்', 'டூயட்', 'மேட்டுக்குடி', 'தாயகம்', 'உள்ளத்தை அள்ளித்தா' என 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவும், குணசித்ர கதாபாத்திரங்களிலும் நடித்து கலக்கியுள்ளார். இவர் மலையாளத்தில் 1995ல் பிரபல ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் வெளியான 'தி கிங்' படத்தில் விக்ரம் பரமானந்த் கோர்பாத் கதாபாத்திரத்தில் நடித்து மலையாளத்திலும் பிரபலமானார்.
பின்னர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துவந்த அவர், தமிழில் கடைசியாக 2008ல் வெளியான 'பட்டைய கௌப்பு' என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் மலையாளத்தில் 2015ம் ஆண்டு வரை நடித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் கசான் கான் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.