அஜர்பைஜான் ஷூட்டிங் முடிந்தது... விரைவில் விடாமுயற்சி!

Vidaamuyarchi
Vidaamuyarchi

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on: 

அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித். தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான, ‘துணிவு’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜான், துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குநர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குநராகப் பணியாற்றி அதன் பிறகு இயக்குநராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம்தான் ‘விடாமுயற்சி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை பிரபல லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. சென்ற வருடம் மே 1, விடாமுயற்சி எனப் பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்டது.

இந்தப் படத்தின் ஷூட்டிங் படங்கள், வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. அந்த வகையில், அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சமீபத்தில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த சில வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அஜித் மற்றும் ஆரவ் காருக்குள் உட்கார்ந்து இருக்கும் நிலையில் அந்த கார் கிரேன் உதவியால் அந்தரத்தில் தூக்கப்படுகிறது. அதன்பின் ஒரு கட்டத்தில் அந்தரத்திலேயே கார் சுழன்று கொண்டிருக்கும் நிலையில் அஜித் மற்றும் ஆரவ் காரின் உள்ளிருக்கும் காட்சியை பார்க்கும்போது திகில் அடையச் செய்தது.

இதையும் படியுங்கள்:
'இந்தியன் 2' எப்படி இருக்கு? ரஜினி கொடுத்த ரிவ்யூ!
Vidaamuyarchi

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்தடுத்து 2 போஸ்டர்களை வெளியிட்டு அந்த விமர்சனங்களை தவிடுபொடியாக்கியது படக்குழு. தொடர்ந்து விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. அந்த போஸ்டரில் மீண்டும் இளமையான கெட்டப்பில் அஜித், திரிஷாவுடன் உள்ளார். முதல் இரண்டு போஸ்டர்கள் நரை முடியுடன் இருந்த அஜித், தற்போது மீண்டும் கருப்பு நிற முடியுடன் உள்ளார்.

இந்நிலையில் "குட் பேட் அக்லி" பட பணிகளுக்கு சற்று ஓய்வு கொடுத்துவிட்டு, முழு நேரமாக "விடாமுயற்சி" பட பணிகளை கவனித்து வருகிறார் அஜித். நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன் மற்றும் பிற நடிகர்களும் படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஏறத்தாழ 70% பணிகள் முடிந்துள்ள நிலையில், அஜர்பைஜான் நாட்டில் தங்களுடைய படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ளது "விடாமுயற்சி" படக் குழு, இந்நிலையில் அடுத்த கட்ட படபிடிப்பு விரைவில் துவங்கவுள்ள நிலையில், பட குழுவோடு இணைந்து தல அஜித் அவர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com