ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லராக உருவாகும் விதார்த்தின் புதிய படம்!

ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லராக உருவாகும் விதார்த்தின் புதிய படம்!
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

கோலிவுட்டில் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து பரவலான வெற்றியைக் கொடுத்துவரும் நடிகர்களில் ஒருவர் விதார்த். இவர் தற்போது புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார்.

அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில் வரவிருக்கும் ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லர் படத்தில்தான் நடிகர் விதார்த் நடிக்கவிருக்கிறார். இவருடன், சந்தோஷ் பிரதாப் மற்றும் கலையரசன் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ட்ரெண்டிங் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் கே.சசிகுமார் தயாரிப்பில், இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில், திரிகன், ஜான் விஜய், தேஜு அஸ்வினி மற்றும் அதுல்யா சந்திரா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

ஒரு கொலையைச் சுற்றி 4 முக்கிய கதாபாத்திரங்கள் சுழலும்படியான ஹைப்பர்லிங்க் க்ரைம் த்ரில்லராக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி, அதை சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு என்.எஸ் உதயகுமார் ஒளிப்பதிவு செய்ய, அஜீஷ் இசையமைக்கிறார்.

நடிகர் விதார்த் ஏற்கெனவே நடிகர் சரத்குமாருடன் இணைந்து க்ரைம் த்ரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இப்படமும் அவரது நடிப்பில் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com