விடுதலை 2 போஸ்டர் வெளியீடு... மாஸ் கெட்டப்பில் விஜய் சேதுபதி!

விடுதலை 2
விடுதலை 2
Published on

விடுதலை 2 படத்தின் முதல் தோற்ற போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான திரைப்படம் 'விடுதலை'. விஜய் சேதுபதி, சூரி, சேத்தன், ராஜீவ் மேனன், கௌதம் மேனன் என பலர் நடித்துள்ள இந்தப் படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. ஜெயமோகனின் 'துணைவன்' நாவலை அடிப்படையாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

கடைநிலை காவல் அதிகாரியாக நடிகர் சூரியும், விடுதலைப் படை போராளியாக வாத்தியார் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, சேத்தன், ராஜீவ்மேனன், கௌதம் மேனன், ஆகியோரும் முக்கியப் பாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்காக சூரி கிட்டத்தட்ட இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் செலவு செய்தார். இதனால் மற்ற படங்களில் நடிக்காமல் முழுக்க முழுக்க விடுதலை படத்தில் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார். சூரியின் நடிப்பும் சிரிப்பும் அழுகையும் நம்மைப் போலவும் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் நம்மைப் போன்றே இருக்ககூடிய சாதாரண மனிதனைப் போலவும் இருந்ததால் ரசிகர்களில் பெரும்பாலானோர் இந்த படத்தினை வெற்றிப் படமாக மாற்றினர். சூரியின் சினிமா வரலாற்றில் முக்கிய படமாக அமைந்தது இந்த படம் தான். இதை தொடர்ந்து தான் தற்போது சூரிக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தகக்து. கருடன் படம் ரிலீஸ் ஆன நிலையில், இன்னும் கொட்டுக்காளி படமும் அவருக்கு கையில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி!
விடுதலை 2

'விடுதலை' படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில், தற்போது முதல் பாகம் வெளியாகி ஹிட்டானதைத் தொடர்ந்து, 'விடுதலை 2ம் பாகம்' எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் ஒரு போஸ்டரில் கையில் ஆயுதத்துடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் விஜய் சேதுபதி ஓடி வருவது போன்றும், மற்றொரு போஸ்டரில் விஜய் சேதுபதியும், மஞ்சு வாரியரும் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு போஸ்டர்களிலும் “உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலா தார்” என்ற திருக்குறள் இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்த பாகத்தில் முழுக்க முழுக்க விஜய் சேதுபதியின் ப்ளாஸ் பேக் இடம்பெறும் என தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com