விடுதலை பாகம் - 1 - துணைவனா? சோளகர் தொட்டியா?

விடுதலை பாகம் - 1 - துணைவனா? சோளகர் தொட்டியா?

எந்த ஒரு படம் வெற்றி அடைந்தாலும் , அப்படத்தின் கதை என்னுடையது, இந்த நாவலை தழுவி எடுக்கபட்டது என்ற பேச்சுக்கள் நிலவும்.

வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்த விடுதலை பாகம் 1 திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ஜெயலலித ஆட்சி காலத்தில், வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது காவல் துறையினர் நிகழ்த்திய மிருகத்தனமான மனித உரிமைகள் பற்றி இந்த படம் பேசுகிறது. 

விடுதலை படம் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' என்ற நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாக தயாரிப்பு தரப்பில் சொல்லப்பட்டது. 

ஆனால் பாலமுருகன் எழுதிய 'சோளகர் தொட்டி' என்ற நாவலை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக தற்சமயம் சொல்கிறார்கள் ஒரு தரப்பினர். 

தமிழக கர்நாடக மாநிலங்களில் வாழும் சோளக்கர்கள் வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது தமிழக கர்நாடக கூட்டு அதிரடி படையினரால் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்தார்கள். நாவலின் முதல் பாகம் சோளக்கர் மக்களின் இயற்கை வழி பாடுகளை பற்றி பேசுகிறது. இரண்டாம் பாகம் இவர்கள் சந்தித்த மோசமான சித்ரவதைகள் பற்றி சொல்கிறது. பாலமுருகன் பாதித்த மக்களை நேரில் சந்தித்து ஆவண படுத்தி இருப்பார். 

விடுதலை படத்தின் பல காட்சிகள் இந்த நாவலில் சொல்லப்படும் சம்பவங்களை அடிப்படையாக கொண்டுள்ளது என்கிறார்கள் சிலர். வெவ்வேறு காலகட்டத்தில் நடந்த அதிகார அத்து மீறல்களை ஒரே படத்தில் கலவையாக தந்துள்ளார் வெற்றி மாறன் என்று குற்றம் சாட்டு கிறார்கள் சிலர். 

எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டின் இருண்ட பக்கங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய வெற்றி மாறனை பாராட்டலாம். மனித உரிமை பயணத்தில் நம் நாடு போக வேண்டிய தூரம் மிக அதிகம். வெற்றி மாறன் இயக்கிய விடுதலை, விசாரணை போன்ற படங்கள் மனித உரிமை பயணத்தில் ஒரு சிறு முயற்சியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com