விக்கி - நயன்தாரா.. இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாள்.. வைரல் படங்கள்!

இரட்டை குழந்தைகளுடன் விக்கி
இரட்டை குழந்தைகளுடன் விக்கி

இரட்டை குழந்தைகளான உயிர் உலகத்துடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த விக்கி - நயன் குழந்தைகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நடிகை நயன்தாரா பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னேறியவர். ஹீரோக்கள் கோலாட்சி கொண்டிருந்த காலத்தில் ஹீரோ இன்றி ஹீரோயினாக மட்டுமே நடித்து அசத்தியவர். இவருக்கு கடந்த ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணமான நிலையில் இருவருக்கும் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்தது.

உலக அளவில் instagram, எக்ஸ் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த பெரும்பாலான நடிகர், நடிகைகள் தங்கள் கணக்குகளை வைத்திருக்கின்றனர்.

ஆனால் நடிகை நயன்தாரா எந்த ஒரு சமூக வலைதள பகுதியிலும் கணக்கு தொடங்காமல் இருந்தார். இந்த நிலையில் தற்போது instagram பகுதியில் தனக்கென பிரத்தியேக ஒரு பகுதியை தொடங்கியுள்ளார்.

அந்த பக்கத்தில் முதல் பதிவாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படத்தின் ஹுக்கும் பாடலுக்கு, தன் குழந்தைகளுடன் எண்ட்ரி கொடுக்கும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் முதன்முறையாக தனது இரண்டு குழந்தைகளின் முகத்தை மக்களுக்கு அறிமுகம் செய்தார். இதன் தொடர்ச்சியாக அவ்வபோது பண்டிகை நாட்களில் குழந்தைகளுடன் கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனாலும் குழந்தைகளின் முகம் எங்கேயும் சரியாக தெரிந்திருக்காது.

இந்த நிலையில் குழந்தைகளின் முகத்தை நன்றாக தெரியபடுத்திய விக்கி - நயன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மகன்களே என பதிவிட்டுள்ளனர். மேலும் என் முகம் கொண்ட ஒரு குழந்தை என்றும், என் குணம் கொண்ட ஒரு குழந்தை என்றும் இருவரையும் குறிப்பிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இதனை பார்த்த ரசிகர்கள் குழந்தைகளின் முகத்தை பார்த்து அடடே அழகாக இருக்கிறார்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தங்கள் மகன்கள் உயிர் மற்றும் உலகத்தின் முதல் பிறந்தநாளை மலேசியாவில் கொண்டாடி உள்ளனர். அங்குள்ள புகழ்பெற்ற டுவின் டவர் முன் மகன்களை தோளில் தூக்கி வைத்தபடி போட்டோ எடுத்து தன் மகன்களுக்கு ஸ்பெஷலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com