விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன் - சீமான் ஆவேசம்

ஆந்திராவில் ‘வாரிசு’ படத்துக்கு சிக்கல்
விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன் - சீமான் ஆவேசம்

ளைய தளபதி விஜய். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலும் ரசிகர் வட்டம் உண்டு. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. கேரளாவிலும் வசூலில் சாதனை படைத்தது. தெலுங்கிலும் சக்கைப்போடுபோட்டது.

இதனையடுத்து நெல்சன் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் நடித்தார். கலவையான விமர்சனங்களுடன் வந்த இப்படம் வணிக ரீதியாக தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் லாபம் தந்தது.

இதனைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்தப் படம் ’வாரிசு’ என்றும், தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார் என்ற அறிவிப்பும் வந்தது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தவிர, பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தீபாவளி தினத்தன்று 'வாரிசு' திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டது படக்குழு.

விஜய் குரலில் “ரஞ்சிதமே... ரஞ்சிதமே...” என்ற முதல் பாடலும் வெளியாகி ஹிட் ஆகி பட்டிதொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது.

சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.

இதனிடையே ஐதராபாத்தில் நடந்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் “பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்குப் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளித்து அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த முடிவால் பண்டிகை நாட்களில் தமிழ் படங்கள் ஆந்திராவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து இயக்குநர் லிங்குசாமி பேசுகையில்...

சினிமாவில் தற்போது பொற்காலம் நடந்துக்கொண்டிருக்கிறது. இச்சூழலில் இந்த மாதிரி பிரச்னைகள் எழவே கூடாது. இது சினிமாவை அழிவை நோக்கி இழுத்து சென்றுவிடும் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் விஜய்யின் வாரிசு படம் வெளியாவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை திருவொற்றியூரில் பேட்டியளித்தார்.

அதில், "ஆந்திராவில் 'வாரிசு' படம் வெளியாகாவிட்டால் விஜய்க்காக களத்தில் இறங்கி போராடுவேன்" என்று பேசியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com