விஜய்யின் GOAT படத்தில் இவர் தான் வில்லனா?

Goat poster
Goat poster

விஜய்யின் GOAT படத்தின் மெயின் வில்லன் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி 68 படத்திற்கு 'GOAT' என தலைப்பிடப்பட்டுள்ளது. நியூ இயரை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர்கள் மூலம் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பது உறுதியானது.

இந்த படத்தில், லைலா, மீனாட்சி சவுத்ரி, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடிப்பது தான் ஹைல்டைட். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் இந்த ஆண்டிற்குள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரட்டை விஜய்யின் ஒரு விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில் தற்போது ஒரு புது அப்டேட் வெளியாகியுள்ளது.

Actor Ajmal with Vijay
Actor Ajmal with Vijay

இந்நிலையில் GOAT படத்தின் மெயின் வில்லன் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அஜ்மல் தான் இந்த படத்தின் முக்கிய வில்லனாக இருக்கிறார் என்று இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதையும் படியுங்கள்:
ராம நாமம் சொன்னால் இத்தனை புண்ணியமா?
Goat poster

சமீபத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் இருக்கும் போஸ்டர் வெளியானது. அதில் அஜ்மல் தான் மெயின் வில்லன் என கூறப்படுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வில்லன் கதாபாத்திரத்தில் அஜ்மல் பக்காவாக பொருந்துவார் என சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com