'பிச்சைக்காரன்' மேஜிக் மீண்டும் நடக்குமா? 10 வருஷம் கழிச்சு இணைந்த சசி - விஜய் ஆண்டனி கூட்டணி!

Vijay Antony and sasi film
Nooru saamy filmImage credit: District
Updated on

பிச்சைக்காரன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனியுடன் சசி இணையும் திரைப்படத்திற்கு 'நூறு சாமி' என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றது.

இந்த திரைப்படம் பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்த மகன் , தன் தாயின் தீர்க்க முடியாது நோய் , குணமாக வேண்டி சென்னைக்கு பிச்சைக்காரனாக வருவான். அது ஒரு வகையான வேண்டுதல் , ஒரு சாமியாரின் அறிவுரைப் படி அதைப் பின்பற்றி இருப்பான். இந்த திரைப்படம் தாய்க்கும் மகனுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை வெளிப்படுத்துகிறது.

இயக்குனர் சசியின் ஒவ்வொரு திரைப்படமும் உணர்வுப் பூர்வமாகவும் , உறவுகளைப் பற்றிய ஆழமான உணர்வையும் வெளிக் காட்டுவதாக இருக்கும். பிச்சைக்காரன் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்குப் பின்னர் , இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்தால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. நூறு சாமி திரைப்படமும் மனித உறவுகளைப் பற்றி ஆழமாக பேச உள்ளது.

இந்தத் திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் சசி " பிச்சைக்காரன் திரைப்படத்திற்கு பின்னர் நான் விஜய் ஆண்டனியுடன் இணைந்துள்ளேன். ​'பிச்சைக்காரன்' மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளதால் , நூறு சாமி திரைப்படத்தின் மீதும் மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை கண்டு நாங்கள் பயப்படவில்லை.

பிச்சைக்காரன் திரைப்படம் எவ்வாறு ரசிகர்களின் மனதில் ஒரு ஆழமான தாக்கத்தை கொடுத்தது. அதேபோன்ற தாக்கத்தினை 'நூறு சாமி' திரைப்படமும் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ஆனாலும் இது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் , ஒரு புதிய பாணியில் சொல்லப்பட உள்ளது.

இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியின் காட்சிகள் , ஸ்வாசிகாவை விட குறைவாகத் தான் இருக்கும். ஆனால் , படத்தின் முக்கியத்துவம் இப்படி இருந்தும் கூட , "இந்த திரைப்படத்தை நானே செய்கிறேன் , நானே தயாரிப்பாளராகவும் இருக்கிறேன் "என்று கூறினார். இந்த படத்தின் கதை அவருக்கு அந்தளவுக்கு பிடித்து போனது , அதன் மீது அவருக்கு நம்பிக்கையும் உள்ளது, என்று கூறியிருந்தார்.

படத்தின் தலைப்பிற்கு ஏற்றார் போல, இந்த திரைப்படம் தான் மகன் பாசத்தினை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது. அதனால் , படத்தின் காட்சிகள் மிகவும் உணர்வுப்பூர்வமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

​இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்வாசிகா நடிக்கிறார். அவருடன் விஜய் ஆண்டனி, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ் ,கருணாஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனிஷ்காந்த், வினோதினி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். ​இந்த திரைப்படம் ஜூன் வெளியீடாக 19 ஆம் தேதி வெளியாக உள்ளது.தெலுங்கில் 'வந்தா தேவுல்லு' என்ற பெயரிலும் அதே நாளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com